Home /News /entertainment /

சமந்தா நடிக்கும் யசோதா படத்தின் வெளியீடு தள்ளிப்போகும் என தகவல்…

சமந்தா நடிக்கும் யசோதா படத்தின் வெளியீடு தள்ளிப்போகும் என தகவல்…

நடிகை சமந்தா

நடிகை சமந்தா

Samantha yashoda : சமந்தாவுடன், வரலட்சுமி சரத் குமார், ராவ் ரமேஷ், உன்னி முகந்தன், முரளி சர்மா, சம்பத் ராஜ் உள்ளிட்டோர் இடம்பெற்றுள்ளனர்.

    சமந்தா நடிப்பில் உருவாகி வரும் யசோதா படத்தின் வெளியீடு தள்ளிப் போகும் என தகவல்கள் வெளியாகியுள்ளது.

    தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகையாக சமந்தா மாறியுள்ளார். இவரது நடிப்பில் வெளியாகும் பெரும்பாலான படங்கள் வெற்றி பெற்று விடுவதால் சமந்தாவை இடம்பெறச் செய்வதற்கு தயாரிப்பாளர்ளும், இயக்குனர்களும் ஆர்வம் காட்டுகின்றனர்.

    சமீபத்தில் இவர் நடித்திருந்த காத்துவாக்குல ரெண்டு காதல் படம் நல்ல வரவேற்பை பெற்றது. புஷ்பா படத்தில் சமந்தா ஆடியா ஊ சொல்றியா மாமா என்ற பாடல் மெகா ஹிட்டாகி, புஷ்பா படத்திற்கு பலம் சேர்த்தது.

    நடிகை சமந்தா கர்ப்பமா? கவனம் பெறும் புகைப்படம் 

    இதனால் அடுத்த பாகத்திலும் அவர் இடம்பெறுவார் என்று பேசப்படுகிறது. இதற்கிடையே யசோதா என்ற படத்தில் சமந்தா நடித்து வருகிறார். இந்தப்படம், பெண்களை மையமாகக் கொண்ட அறிவியல் த்ரில்லர் ஜேனரில் உருவாகி வருகிறது.

    இந்தப் படத்தை ஆகஸ்ட் 12-ம்தேதி வெளியிடுவதற்கு படக்குழுவினர் திட்டமிட்டிருந்தனர். இந்நிலையில்  சில தவிர்க்க முடியாத காரணங்களால் படத்தின் வெளியீடு தள்ளிப் போகலாம் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது.

    இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும் என்று கோலிவுட்டில் பேசப்படுகிறது.

    Also read... ஆஸ்கர் உறுப்பினர் குழுவில் நடிகர் சூர்யா தேர்வு  

    யசோதா படத்தை தெலுங்கில் முழுமையாக எடுத்துள்ளார்கள். இந்தப் படம் தமிழ், கன்னடம், மலையாளம், இந்தி மொழிகளில் டப் செய்யப்படவுள்ளது.

    இந்த படத்தில் சமந்தாவுடன், வரலட்சுமி சரத் குமார், ராவ் ரமேஷ், உன்னி முகந்தன், முரளி சர்மா, சம்பத் ராஜ் உள்ளிட்டோர் இடம்பெற்றுள்ளனர்.
    Published by:Musthak
    First published:

    Tags: Actress Samantha

    அடுத்த செய்தி