முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / ஸ்டைலிஷ் உளவாளியாக சமந்தா... 'சிட்டாடல்' சீரிஸ் படப்பிடிப்பு தொடக்கம்!

ஸ்டைலிஷ் உளவாளியாக சமந்தா... 'சிட்டாடல்' சீரிஸ் படப்பிடிப்பு தொடக்கம்!

சமந்தா

சமந்தா

இந்த வெப் சீரிஸ் சர்வதேச அளவில் முன்னணி இடத்தைப் பிடிக்கும் இந்திய தொடர்களில் ஒன்றாக இருக்கும்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Tamil Nadu, India

ஃபேமிலி மேன் 2 வெப் சீரிஸை தொடர்ந்து அதன் இயக்குநர்களுடன் சிட்டாடல் சீரிஸின் படப்பிடிப்பை தொடங்கியுள்ளார் சமந்தா. கடைசியாக 'யசோதா' படத்தில் நடித்த நடிகை சமந்தா ரூத் பிரபு, உளவு பார்க்கும் ஆக்‌ஷன் தொடரான 'சிட்டாடல்' சீரிஸின் படப்பிடிப்பைத் தொடங்கியுள்ளார். இதனை ராஜ் மற்றும் டிகே இயக்க, இத்தொடரில் சமந்தாவுடன் இணைந்து வருண் தவானும் நடிக்கிறார்.

சமந்தா முன்பு நடித்த ஃபேமிலி மேன் சீரிஸ் இயக்குநர் இரட்டையர் ராஜ் மற்றும் டிகே இது குறித்து, "இந்த பவர்ஹவுஸுடன் மீண்டும் இணைவதில் மிகுந்த உற்சாகம்! சமந்தா பிரபு சிட்டாடல் உலகிற்கு வருக! இப்போது படப்பிடிப்பு நடக்கிறது” என்று ட்விட்டரில் பதிவிட்டுள்ளனர்.

சிட்டாடல் தொடரின் தயாரிப்பு பணி தற்போது மும்பையில் நடந்து வருகிறது. அறிக்கைகளின்படி, யூனிட் அடுத்ததாக வட இந்திய இடங்களுக்கும், அதைத் தொடர்ந்து செர்பியா மற்றும் தென்னாப்பிரிக்காவிற்கும் செல்கிறது. இதில் வருண் மற்றும் சமந்தா இருவரும் ஸ்டைலான உளவாளிகளாக நடிப்பார்கள் என்றும் கூறப்படுகிறது. இந்த வெப் சீரிஸ் சர்வதேச அளவில் முன்னணி இடத்தைப் பிடிக்கும் இந்திய தொடர்களில் ஒன்றாக இருக்கும். அதோடு சமந்தாவும் வருண் தவானும் திரை இடத்தைப் பகிர்ந்து கொள்வது இதுவே முதல் முறை.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

First published:

Tags: Actress Samantha