சம்பளத்தை உயர்த்திய சமந்தா...!

நடிகை சமந்தா

நடிகை சமந்தா

இந்த வருடம் வெளியான தி பேமிலி மேன் 2 வெப் தொடர் சமந்தாவுக்கு இதுவரை இல்லாத அளவுக்கு பெயரை சம்பாதித்து தந்தது.

  • News18
  • Last Updated :
  • Share this:
தி பேமிலி மேன் 2 வெப் தொடருக்குப் பின் தனது சம்பளத்தை உயர்த்தியுள்ளார் நடிகை சமந்தா.

ஆர்ப்பாட்டமில்லாமல் அறிமுகமாகி படிப்படியாக முன்னணி நடிகை இடத்தைப் பிடித்தவர் சமந்தா. சென்னையில் வளர்ந்தவர் என்றாலும், தெலுங்கர் என்று சொல்லும் அளவுக்கு தெலுங்கு சினிமாவில் சமந்தா ஐக்கியமாகியுள்ளார். அவரது நடிப்பில் தமிழில் காத்து வாக்குல ரெண்டு காதல் படமும், தெலுங்கில் சாகுந்தலம் படமும் தயாராகி வருகிறது

இந்த வருடம் வெளியான தி பேமிலி மேன் 2 வெப் தொடர் சமந்தாவுக்கு இதுவரை இல்லாத அளவுக்கு பெயரை சம்பாதித்து தந்தது. இதில் ஈழப்போராளியாக ஆக்ரோஷமான நடிப்பை வெளிப்படுத்தினார். இந்திய அளவில் அவரது நடிப்பு பாராட்டப்பட்டது.

நாக சைதன்யாவுடனான திருமணம் முறிந்த நிலையில், புதிய படங்களை அதிகளவில் ஒப்புக் கொள்கிறார். தமிழில் ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரிப்பில் தமிழ், தெலுங்கு இரு மொழிகளில் தயாராகும் படத்தில் நடிக்க ஒப்புக் கொண்டுள்ளார். அதேபோல் ஸ்ரீதேவி மூவிஸ் தயாரிக்கும் தெலுங்கு, தமிழ் படத்தில் நடிக்கவும் ஒப்புக் கொண்டுள்ளார். இவை தவிர இந்திப் படங்கள் மற்றும் வெப் தொடர்களில் நடிக்க பேச்சுவார்த்தை நடந்து வருகிறது

Also read... ஜெய் சூப்பர் ஹீரோவாக நடிக்கும் பிரேக்கிங் நியூஸ்...!

தி பேமிலி மேன் 2 வெப் தொடரின் வெற்றி மற்றும் புதிய படங்கள் தமிழ், தெலுங்கு இரு மொழிகளில் தயாராவதால் தனது சம்பளத்தை 4 கோடிகளாக சமந்தா உயர்த்தியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. நயன்தாராவுக்கு அடுத்து அதிக சம்பளம் பெறும் தென்னிந்திய நடிகை சமந்தா எனவும் கூறப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Vinothini Aandisamy
First published: