கர்ப்பம் குறித்து மௌனம் கலைத்த நடிகை சமந்தா!

தனது ட்விட்டரில், சமந்தா ‘பேபி அக்கினேனி’ எனப் பெயரை மாற்றியிருப்பது, அவர் கர்ப்பமாக இருக்கிறாரோ என்ற சந்தேகத்தை கிளப்பியிருந்த நிலையில், தான் நடிக்கும் ’ஓ பேபி’ படத்தை புரோமோட் செய்வதற்காகத்தான் ட்விட்டரில் பெயர் மாற்றம் செய்திருக்கிறார்.

கர்ப்பம் குறித்து மௌனம் கலைத்த நடிகை சமந்தா!
நடிகை சமந்தா
  • News18
  • Last Updated: June 10, 2019, 3:55 PM IST
  • Share this:
தான் கர்ப்பமாக உள்ளதாக வெளியான வதந்திக்கு நடிகை சமந்தா முற்றுபுள்ளி வைத்துள்ளார்.

தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் முன்னணி நடிகையாக வலம் வருபவர் சமந்தா.

தெலுங்கு நடிகர் நாகார்ஜூனா மகன் நடிகர் நாக சைத்தன்யாவும் நடிகை சமந்தாவும், காதலித்து வந்தனர். பின்பு இருவீட்டாரின் சம்மதத்துடன் இவர்களது திருமணம் அக்டோபர் 6, 2017 அன்று கோவாவில் நடந்தது.


நடிகை சமந்தா கிருஸ்துவ மதத்தைச் சேர்ந்தவர், நாக சைதன்யா இந்து மதத்தைச் சேர்ந்தவர். எனவே, இரண்டு மத முறைப்படியும் திருமணம் நடைப்பெற்றது. இதைத் தொடர்ந்து சமந்தா ருத் பிரபு என்னும் பெயர் சமந்தா அக்கினேனி என்றானது.

தொடர்ந்து கோலிவுட்டிலும் டோலிவுட்டிலும் பிஸியாக வலம் வரும் சமந்தா கர்ப்பமாக உள்ளதாக தகவல்கள் வெளியாகி வந்தன. இந்நிலையில் இது குறித்து வெளியான செய்தி ஒன்றை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்ட சமந்தா நான் கர்ப்பமாக இருக்கனா? எப்போது அதை நீங்கள் கண்டுபிடித்தீர்கள் எங்களுக்கும் சொல்லுங்கள் என காமெடியாக பதில் கொடுத்துள்ளார்.மேலும்,  தனது ட்விட்டரில், சமந்தா ‘பேபி அக்கினேனி’ எனப் பெயரை மாற்றியிருப்பது, அவர் கர்ப்பமாக இருக்கிறாரோ என்ற சந்தேகத்தை கிளப்பியிருந்த நிலையில், தான் நடிக்கும் ’ஓ பேபி’ படத்தை புரோமோட் செய்வதற்காகத்தான் ட்விட்டரில் பெயர் மாற்றம் செய்திருக்கிறார் என்று டோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர்.

Also see...

First published: June 10, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading