Home /News /entertainment /

சமந்தா திருமண புகைப்படங்களைப் பகிர்ந்து சோகமான அவரது தந்தை

சமந்தா திருமண புகைப்படங்களைப் பகிர்ந்து சோகமான அவரது தந்தை

பெற்றோருடன் சமந்தா

பெற்றோருடன் சமந்தா

சமந்தா - நாக சைத்தன்யாவுக்கு இடையே கருத்து வேறுபாடுகள் இருப்பதாக சமூக வலைதளங்களில் பல மாதங்களாக ஊகங்கள் பரவிய நிலையில், இளம் தம்பதிகள் இருவரும் பிரிவதாக அறிவித்தனர்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India
    நடிகை சமந்தாவின் அப்பா ஜோசப் பிரபு சமீபத்தில் பகிர்ந்த முகநூல் பதிவு இணையத்தில் கவனம் பெற்று வருகிறது.

    கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் சமந்தாவும் நாக சைதன்யாவும் பிரிவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்தனர். இந்த ஜோடி 2017-ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டது. சில ஆண்டுகள் திருமண வாழ்க்கைக்குப் பிறகு அவர்கள் இருவரும் பிரிந்து, 2021-ல் விவாகரத்து கோரி மனு தாக்கல் செய்தனர். இருவரும் தங்கள் பிரிவினை பற்றி அதிகம் பேசுவதைத் தவிர்த்துள்ள நிலையில், சமந்தாவின் தந்தை இப்போது தனது சமூக வலைதள பக்கத்தில் தனது சோகத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

    சமந்தா - நாக சைத்தன்யாவுக்கு இடையே கருத்து வேறுபாடுகள் இருப்பதாக சமூக வலைதளங்களில் பல மாதங்களாக ஊகங்கள் பரவிய நிலையில், இளம் தம்பதிகள் இருவரும் பிரிவதாக அறிவித்தனர். ஏறக்குறைய ஒரு வருடத்திற்குப் பிறகு, சமந்தாவின் தந்தை ஜோசப் பிரபு, சமந்தா மற்றும் நாக சைதன்யாவின் திருமண புகைப்படங்களைப் பகிர்ந்து, "நீண்ட காலத்திற்கு முன்பு ஒரு கதை இருந்தது. அது இனி இல்லை!!! எனவே, ஒரு புதிய கதையைத் தொடங்குவோம். மற்றும் ஒரு புதிய அத்தியாயம்!!!” என்று தெரிவித்துள்ளார்.

    குழந்தை கட்டாயம் வேணும்... திருமணத்திற்கு முன்பு ரவீந்தருக்கு கண்டிஷன் போட்ட மகாலட்சுமி!

    மேலும் கமெண்ட் பகுதியில், "உங்கள் உணர்வுகளுக்கு நன்றி. ஆம், உணர்வுகளை வெல்ல நான் நீண்ட நேரம் அமர்ந்திருந்தேன். உணர்வுகளுடன் உட்காருவதற்கும் துக்கப்படுவதற்கும் வாழ்க்கை மிகச் சிறியது" என்று குறிப்பிட்டிருந்தார்.



    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    சமந்தா தற்போது தமிழ்-தெலுங்கு என இரு மொழிகளில் உருவாகும் 'யசோதா' படத்தின் படப்பிடிப்பில் பிஸியாக இருக்கிறார். தவிர லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய்யின் 'தளபதி 67' படத்தில் அவர் முக்கிய வேடத்தில் நடிப்பதாக செய்திகள் வெளியாகியிருக்கின்றன.
    Published by:Shalini C
    First published:

    Tags: Actress Samantha

    அடுத்த செய்தி