• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • கணவருடன் ஏற்பட்ட பிரிவு... பழையபடி பெயரை மாற்றிய சமந்தா!

கணவருடன் ஏற்பட்ட பிரிவு... பழையபடி பெயரை மாற்றிய சமந்தா!

சமந்தா

சமந்தா

நாக சைத்தன்யாவுடனான திருமண முறிவுக்குப் பிறகு பழையபடி தனது பெயரை சமந்தா பிரபு என மாற்றியிருக்கிறார்.

  • Share this:
    நடிகை சமந்தா ட்விட்டரில் தனது பெயரை மாற்றியுள்ளார்.

    படங்களில் ஒன்றாக நடித்து காதலில் விழுந்த சமந்தா - நாக சைத்தன்யா ஜோடி, கடந்த 2017, அக்டோபர் 7-ம் தேதி திருமணம் செய்துக் கொண்டது. கோவாவில் இவர்களின் திருமணம் மிகவும் கோலாகலமாக நடந்தது.

    இந்து - கிறிஸ்டியன் என இரு முறைப்படியும் நாகசைத்தன்யா - சமந்தாவின் திருமணம் நடந்தது. திருமணத்திற்கு பிறகும் ஹீரோயினாக நடித்து வந்தார் சமந்தா. சமீபத்தில் இவரது நடிப்பில் ‘தி ஃபேமிலி மேன் 2’ என்ற வெப் தொடர் வெளியாகி, ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றது.

    இதற்கிடையே சமந்தா ட்விட்டரில் தனது பெயரை ‘எஸ்’ என மாற்றியதிலிருந்து, அவர் நாக சைத்தன்யாவை விவாகரத்து செய்யவிருப்பதாக தகவல்கள் வலம் வந்தன. ஆனால் இது குறித்து அவர்கள் இருவரும் வாய் திறக்கவில்லை. வெறும் வதந்தியாகவே இது முடிந்துவிடும் என ரசிகர்கள் எதிர்பார்த்துக் கொண்டிருந்த நிலையில், கடந்த சனிக்கிழமை தங்களது திருமண உறவு முடிவுக்கு வந்திருப்பதை தங்களது இன்ஸ்டாகிராம் பக்கங்களில் அறிவித்தனர் சமந்தாவும், நாக சைத்தன்யாவும்.

    இதையடுத்து தற்போது ட்விட்டரில் மீண்டும் தனது பெயரை திருமணத்திற்கு முன்பு இருந்ததைப் போல, சமந்தா எனவும் யூசர் நேமை சமந்தா பிரபு எனவும் மாற்றியிருக்கிறார். நாக சைத்தன்யாவை திருமணம் செய்துக் கொண்ட பிறகு, அவரின் குடும்பப் பெயரான அக்கினேனி என்பதை இணைத்து சமந்தா அக்கினேனி என வைத்திருந்தார். தற்போது நாக சைத்தன்யாவுடனான திருமண முறிவுக்குப் பிறகு பழையபடி தனது பெயரை சமந்தா பிரபு என மாற்றியிருக்கிறார்.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Shalini C
    First published: