சீன தயாரிப்பை இனி பயன்படுத்தமாட்டேன்: டிக்டாக்கிலிருந்து விலகிய சாக்‌ஷி அகர்வால்

இனி நான் சீனா தயாரிப்புகளை உபயோகிப்பதில்லை எனக்கூறி நடிகை சாக்‌ஷி அகர்வால் இன்று தனது டிக்டாக் கணக்கிலிருந்து தன்னை விலக்கி கொண்டார். டிக்டாக்கில் அவரை 2.18 லட்சம் பேர் பின்பற்றியிருந்தனர்.

  • Share this:
இந்தியா - சீனா எல்லைப் பகுதியில் இந்திய இராணுவ வீரர்கள் 20 பேரை சீன இராணுவம் கொன்ற பிறகு இரு நாட்டுக்கும் இடையே பிரச்னை மேலும் பெரிய அளவுக்கு உருவெடுத்துள்ளது. நேற்று டெல்லியில் உள்ள சீனத் தூதரங்கம் முன்பும் கர்நாடகா முதலான வேறு சில இடங்களிலும் சீனாவைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆளும் கட்சியின் தலைவர்கள் பலர் சீனாவின் பொருட்களை வாங்க வேண்டாம் எனக் கோரி வருகின்றனர்.

அதேவேளையில் பலரும் சீன பொருட்கள் மற்றும் செயலிகளை புறக்கணிப்போம் என்றும் சமூகவலைதளங்களில் கருத்து பதிவிட்டு வந்தனர். இந்நிலையில் நடிகை சாக்‌ஷி அகர்வால் சீனாவின் தயாரிப்புகளை பயன்படுத்தப்போவதில்லை என்று முடிவெடுத்திருப்பதாக தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், “"பொறுமைக்கும் அமைதிக்கும் எடுத்துக்காட்டாக விளங்குவது நம் நாடு. ஆனால் சீனா அதை தனக்கு சாதகமாக பயன்படுத்தி நம் நிலத்தை அபகரிக்க பார்க்கிறது. எனவே நான் இனிமேல் சீனாவில் தயாரிக்கப்படும் பொருட்களை உபயோகப்படுத்த போவதில்லை என்றும், சீன தயாரிப்புகளின் விளம்பரங்களில் நடிப்பது இல்லை என்றும் முடிவு செய்துள்ளேன். இதன் தொடக்கமாக, நான் எனது டிக்டாக் கணக்கை அகற்றியுள்ளேன்.


மேலும் படிக்க: சுஷாந்த் சிங்கின் இழப்பை தாங்க முடியாமல் உயிரை மாய்த்துக் கொண்ட ரசிகை

என்னைப் பொறுத்தவரை எனது நாடு தான் எனக்கு எதிலும் முதன்மையாக தோன்றும், என் நாட்டின் கண்ணியத்தைத் காக்க ஒரு குடிமகளாக செய்ய வேண்டியதைச் செய்ய நான் ஒருபோதும் தயங்கமாட்டேன். ”என்று கூறியுள்ளார்.
First published: June 20, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading