ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

பெயர் சிக்கலில் மாட்டிய சாய் பல்லவியின் தங்கை படம்...!

பெயர் சிக்கலில் மாட்டிய சாய் பல்லவியின் தங்கை படம்...!

சித்திரைச் செவ்வானம்

சித்திரைச் செவ்வானம்

நடிகை சாய் பல்லவியின் தங்கை தமிழில் அறிமுகமாகும் படம் சித்திரைச் செவ்வானம். இந்தப் படத்தின் பெயரை வேறொரு நிறுவனம் பதிவு செய்திருப்பதால் சிக்கலில் மாட்டியுள்ளது.

  • News18
  • 1 minute read
  • Last Updated :

சித்திரைச் செவ்வானம் படத்தை ஸ்டண்ட் மாஸ்டர் சில்வா இயக்கியுள்ளார். இது இயக்குனராக அவருக்கு முதல் படம். இதன் கதையை எழுதியிருப்பவர் இயக்குனர் ஏ.எல்.விஜய். பிரதான வேடத்தில் சமுத்திரகனி நடித்துள்ளார். அவருடன் பூஜா கண்ணன், ரிமா கல்லிங்கல் ஆகியோரும் நடித்துள்ளனர். இதில் பூஜா கண்ணன் நடிகை சாய் பல்லவியின் தங்கையாவார். இவரது முதல் தமிழ்ப் படம் இது.

இந்தப் படத்தின் பெயரை அத்திலி சினிமா என்ற நிறுவனம் தனது பெயரில் 17-03-2020 அன்று தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபையில் பதிவு செய்துள்ளது. அவர்கள் சில்வாவின் சித்திரைச் செவ்வானம் படப்பெயரைப் பார்த்துவிட்டு, அந்தப் பெயரை தாங்கள் பதிவு செய்து வைத்திருப்பதால் மாற்றும்படி கேட்டுள்ளனர். படத்தரப்பிலிருந்து முறையான பதில் வராததால் தற்போது நோட்டீஸ் அனுப்பியுள்ளனர்.

Also read... மாநாடு : திரையரங்குகளை திருவிழாவாக்கிய சிம்பு ரசிகர்கள் - படங்கள்!

லாக்கப், க/பெ.ரணசிங்கம், மதில், ஒரு பக்க கதை, மலேஷியா டு அம்னீஷியா, டிக்கிலோனா, விநோதய சித்தம் போன்ற படங்களை நேரடியாக வெளியிட்ட ஸீ 5 ஓடிடி தளம் இந்தப் படத்தை டிசம்பர் 3 ஆம் தேதி வெளியிடுகிறது.  தமிழ், தெலுங்கு இரு மொழிகளில் ஒரே நேரத்தில் வெளியிடுகின்றனர். சித்திரைச் செவ்வானம் பெயரில் 1979 இல் ஒரு தமிழ்ப் படம் வெளியானது குறிப்பிடத்தக்கது.

First published:

Tags: Director samuthrakani