• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • Sai Pallavi: இதான் என்னோட ஃபிட்னெஸ் சீக்ரெட்... மனம் திறந்த சாய் பல்லவி!

Sai Pallavi: இதான் என்னோட ஃபிட்னெஸ் சீக்ரெட்... மனம் திறந்த சாய் பல்லவி!

சாய் பல்லவி

சாய் பல்லவி

பல நடிகைகள் தங்களை சைஸ் ஜீரோ-வில் வைத்துக் கொள்ள, ஜிம்மிற்கு செல்வதை வழக்கமாக கொண்டுள்ளனர். ஆனால் சாய் பல்லவியோ தான் இதுவரை ஜிம்மிற்கு சென்றதில்லை என்று ஒப்புக்கொண்டுள்ளார்.

  • Share this:
    நடிகை சாய் பல்லவி தனது ஃபிட்னெஸ் சீக்ரெட் என்னவென்பதை வெளிப்படுத்தியுள்ளார்.

    தென்னிந்திய திரையுலகில் நேச்சுரலான அழகைக் கொண்டவர் என சாய் பல்லவியை சொல்லலாம். நடனக் கலைஞராக தனது வாழ்க்கையைத் தொடங்கிய இவர், தற்போது தெலுங்குத் திரையுலகில் முன்னணி நடிகையாகத் திகழ்கிறார். நாக சைதன்யாவுடன் இணைந்து அவர் கடைசியாக நடித்த லவ் ஸ்டோரி திரைப்படமும் மிகப்பெரிய வெற்றி பெற்றது. ரசிகர்கள் அவரை தங்கள் வீட்டுப் பெண்ணாகவே நினைக்கிறார்கள்.

    சினிமாவில் நேர்த்தியாக இருக்க வேண்டும் என அனைவரும் நினைக்கையில், சாய் பல்லவி தனது அறிமுக மலையாளப் படமான 'பிரேமம்' படத்தில் இயற்கையான தோல் அமைப்பு, சுருள் முடி மற்றும் வளர்ந்த புருவங்கள் மூலம் அந்த விதியை உடைத்தார். அவரது அழகு மற்றும் இயல்பான தோற்றத்தால் ரசிகர்கள் அவரை வெகுவாக விரும்பத் தொடங்கினர்.

    பல நடிகைகள் தங்களை சைஸ் ஜீரோ-வில் வைத்துக் கொள்ள, ஜிம்மிற்கு செல்வதை வழக்கமாக கொண்டுள்ளனர். ஆனால் சாய் பல்லவியோ தான் இதுவரை ஜிம்மிற்கு சென்றதில்லை என்று ஒப்புக்கொண்டுள்ளார். தன்னை நல்ல வடிவத்திலும், நெகிழ்ச்சியிலும் வைத்திருக்க, நடனமே போதும் என்று அவர் தெரிவித்திருக்கிறார். மன அழுத்தத்தை விலக்கி உடலை கட்டுக்கோப்பாக வைத்துக் கொள்ள தினமும் நடனம் ஆடுவதாகவும் கூறியுள்ளார்.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Shalini C
    First published: