வசூலில் படம் தோல்வி... சம்பள பாக்கியை வாங்க மறுத்த சாய் பல்லவி

தெலுங்கில் ஷ்ரவானந்த் சாய் பல்லவி நடிப்பில் வெளியான படம் 'Padi Padi Leche Manasu’. ஹனு ராகவபுடி இயக்கத்தில் ஸ்ரீலக்‌ஷுமி வெங்கடேஷ்வரா சினிமாஸ் நிறுவனம் இந்தப் படத்தை தயாரித்திருந்தது. கடந்த மாதத்தில் வெளியான இந்தப் படம் வசூலில் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை.

news18
Updated: January 9, 2019, 7:58 PM IST
வசூலில் படம் தோல்வி... சம்பள பாக்கியை வாங்க மறுத்த சாய் பல்லவி
நடிகை சாய் பல்லவி
news18
Updated: January 9, 2019, 7:58 PM IST
தான் நடித்த படம் வசூலில் தோல்வியைத் தழுவியதால் நடிகை சாய் பல்லவி சம்பள பாக்கியை வாங்க மறுத்துள்ளார்.

சமீபத்தில் தனுஷுடன் சாய் பல்லவி நடித்த படம் மாரி 2. இந்தப் படம் வசூலிலும், ரசிகர்களிடையேயும் நல்ல வரவேற்பைப் பெற்றது. இதையடுத்து, தெலுங்கில் ஷ்ரவானந்த், சாய் பல்லவி நடிப்பில் வெளியான படம் 'Padi Padi Leche Manasu’. ஹனு ராகவபுடி இயக்கத்தில் ஸ்ரீலக்‌ஷுமி வெங்கடேஷ்வரா சினிமாஸ் நிறுவனம் இந்தப் படத்தை தயாரித்திருந்தது.

மாரி 2, தமிழில் வெளியான அதேநாளில் தெலுங்கில் வெளியான இந்தப் படம் ரூ.22 கோடிக்கு வியாபாரமானதாக தகவல் வெளியானது. ஆனால் ரூ.8 கோடி மட்டுமே வசூல் செய்ததாக தெரிய வருகிறது. இந்தப் படத்தில் கதாநாயகியாக நடித்த சாய் பல்லவியிடம் சம்பளத்தில் ஒரு பகுதியை முதலில் கொடுத்த தயாரிப்பாளர், மீதமுள்ள ரூ.40 லட்சம் பணத்தை ரிலீசுக்குப் பிறகு தருவதாக வாக்குறுதி அளித்திருந்தார்.

Actress Sai Pallavi

இந்த நிலையில், வசூலில் படம் தோல்வியடைந்தாலும், சாய் பல்லவியின் மீதி சம்பளத்தை தர அவர் முயன்றுள்ளார். ஆனால் தற்போதைய நிலைமையில் அந்தத் தொகையை தன்னால் பெற்றுக்கொள்ள முடியாது என்றும், வசூலில் நஷ்டம் ஏற்பட்டதில் தானும் பொறுப்பேற்பதாகவும் தயாரிப்பாளரிடம் சாய் பல்லவி கூறியுள்ளார்.

இதனால், சாய் பல்லவியின் பெற்றோரை அணுகி சம்பள பணத்தை கொடுக்க தயாரிப்பாளர் முயன்றுள்ளார். அவர்களும் பணத்தை வாங்க மறுத்துள்ளார்கள். சாய் பல்லவியின் இந்த நடவடிக்கைக்கு திரைத்துறையினர் பலரும் பாராட்டுகளைத் தெரிவித்துள்ளனர்.

பேட்டையா? விஸ்வாசமா?... ரசிகர்களின் சாய்ஸ் என்ன? - வீடியோ
Loading...
First published: January 9, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...