முன்னணி இந்தி நடிகைகள் விலகியுள்ள நிலையில் ஜூனியர் என்.டி.ஆர். – கொரேட்டல சிவா படத்தில் சாய் பல்லவி இடம்பெறவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
தெலுங்கு சினிமா உலகில் முன்னணி நடிகராக இருப்பவர் ஜூனியர் என்.டி.ஆர். இவர் தெலுங்கு சினிமாவின் லெஜண்ட் நடிகரும், ஆந்திராவின் முன்னாள் முதல்வருமான என்.டி.ராமாராவின் பேரன் ஆவார்.
சமீபத்தில் இவரது நடிப்பில் வெளிவந்த ஆர்.ஆர்.ஆர். திரைப்படம் வரலாறு காணாத வெற்றியை பதிவு செய்துள்ளது. படத்தில் ஜூனியர் என்.டி.ஆர். கேரக்டருக்கு பாராட்டுக்கள் குவிந்தன.
இதுவரை 29 படங்களில் அவர் நடித்து முடித்திருக்கும் நிலையில் அடுத்த தனது 30-வது படத்தை தெலுங்கு முன்னணி இயக்குனர் கொரட்டல சிவா இயக்குவார் என்று அறிவித்திருந்தார்.
இதையும் படிங்க - விக்ரம் படத்தில் சூர்யா கேரக்டரை விவரித்த கமல்… பார்ட் 3 உருவாகுமா?
இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்க உள்ளதாலும், தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி என 5 மொழிகளில் படம் உருவாக இருப்பதாலும் தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் ஓர் எதிர்பார்ப்பு உள்ளது.
ஜூனியர் என்.டி.ஆரின் 30வது படத்தில் அவருக்கு ஜோடியாக நடிக்க முதலில் நடிகை ஆலியா பட்டிடம் பேசப்பட்டது. அவரும் சம்மதித்த நிலையில் திடீரென அவர் விலகிவிட்டதாக தகவல்கள் வெளியானது. அடுத்ததாக நடிகை ஸ்ரீதேவி – போனி கபூரின் மகளான ஜான்வி கபூரிடம் பேசப்பட்டபோது அவர் இந்த அழைப்பை ஏற்கவில்லை.
இதையும் படிங்க - இன்ஸ்டாகிராமில் 10 மில்லியன் ஃபாலோயர்ஸை பெற்ற நடிகர் யாஷ்… கன்னட திரையுலகில் சாதனை
இந்நிலையில் சாய் பல்லவி இந்த படத்தில் இடம் பெறுவார் என தகவல்கள் வெளியாகியுள்ளது. பல ஹிட் படங்களில் சாய் பல்லவி நடித்திருப்பதால் தெலுங்கு ரசிகர்களால் அவர் நன்கு அறியப்பட்ட முகமாக உள்ளார்.
நடனம், நடிப்பு என அனைத்திலும் கலக்குவதால் சாய் பல்லவி சரியான தேர்வாக இருப்பார் என படக்குழு கருதியுள்ளது.
இதையும் படிங்க - நடிகை மாளவிகா மோகனனுக்கு வெப் சீரிஸை பார்க்க பரிந்துரைத்த கார்த்தி சிதம்பரம் எம்.பி.!
இந்த படத்தை முடித்துக் கொண்டு, அடுத்ததாக கே.ஜி.எஃப். இயக்குனர் பிரசாந்த் நீல் இயக்கும் படத்தில் ஜூனியர் என்.டி.ஆர். நடிக்கிறார். இதனை புஷ்பா படத்தை தயாரித்த மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளது.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.