முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / சாய் பல்லவி நடிக்கும் ‘கார்கி’ படத்தின் ட்ரெய்லர் ரிலீஸ்!!

சாய் பல்லவி நடிக்கும் ‘கார்கி’ படத்தின் ட்ரெய்லர் ரிலீஸ்!!

கார்கி ட்ரெய்லர் போஸ்டர்

கார்கி ட்ரெய்லர் போஸ்டர்

Gargi Traler : கார்கி படத்தின் டிரைலரை நடிகர்கள் சூர்யா மற்றும் ஆர்யா இயக்குனர் லோகேஷ் கனகராஜ், இசையமைப்பாளர் அனிருத் ஆகியோர் வெளியிட்டுள்ளனர்.

  • Last Updated :

சாய் பல்லவி முன்னணி கதாப்பாத்திரத்தில் நடிக்கும் கார்கி படத்தின் ட்ரெய்லர் ரிலீஸாகியுள்ளது.

தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் பல்வேறு வெற்றிப் படங்களில் நடித்த நடிகை சாய் பல்லவி, தென்னிந்தியாவின் முன்னணி நடிகையாக வளர்ந்து வருகிறார். இவர் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் கார்கி என்ற திரைப்படம், இயக்குனர் கௌதம் ராமச்சந்திரன் இயக்கத்தில் உருவாகி உள்ளது.

கதாநாயகிக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் இந்த படத்தின் கதை அமைக்கப்பட்டுள்ளது. இப்படத்தை தமிழ், தெலுங்கு மற்றும் கன்னடம் ஆகிய மூன்று மொழிகளில் படக்குழுவினர் உருவாக்கியுள்ளனர்.

இதனை நடிகை ஐஸ்வர்யா லட்சுமி, தாமஸ் ஜார்ஜ், கௌதம் ராமச்சந்திரன் மற்றும் ரவிச்சந்திரன் ஆகியோர் தயாரித்துள்ளார்கள். கோவிந்தா படத்திற்கு இசையமைத்திருக்கிறார்.

பிக் பாஸ் சீசன் 6 க்கு செல்லும் குக் வித் கோமாளி பிரபலம்.. இணையத்தில் உலாவும் இந்த செய்தி உண்மையா? 

கார்கி படத்தை சூர்யா உட்பட உள்பட பல்வேறு முக்கிய நட்சத்திரங்கள் பாராட்டியுள்ள நிலையில், சமீபத்தில் வெளியான இப்படத்தின் போஸ்டர் ரசிகர்களின் வரவேற்பை பெற்றது.

இந்நிலையில் படத்தின் டிரைலர் இன்று வெளியிடப்பட்டுள்ளது.

கார்கி படத்தின் ட்ரெய்லப் பார்க்க..

' isDesktop="true" id="768537" youtubeid="4_73N1iGkCU" category="cinema">

கார்கி படத்தின் தமிழ், தெலுங்கு, கன்னடம் ஆகிய மூன்று மொழிகளுக்கும் நடிகை சாய் பல்லவி டப்பிங் பேசியுள்ளார்.

'பொன்னியின் செல்வன்' இந்தி டீசரை வெளியிடுகிறார் அமிதாப் பச்சன்…

top videos

    ஜூலை 15ஆம் தேதி திரைப்படம் திரைக்கு வரவுள்ளது. தமிழகத்தில் கார்கி படத்தை, சூர்யாவின் 2டி என்டர்டெயின்மென்ட் நிறுவனம் ரிலீஸ் செய்கிறது.

    First published:

    Tags: Actress sai pallavi