முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / சாய் பல்லவி முன்னணி கேரக்டரில் நடிக்கும் கார்கி படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு…

சாய் பல்லவி முன்னணி கேரக்டரில் நடிக்கும் கார்கி படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு…

கார்கி படத்தில் சாய் பல்லவி

கார்கி படத்தில் சாய் பல்லவி

Sai Pallavi Gargi : கார்கி படத்தின் தமிழ், தெலுங்கு, கன்னடம் மொழி வெளியீட்டிற்கான டப்பிங்கை சாய் பல்லவியே பேசியுள்ளார்.

  • Last Updated :

சாய் பல்லவி முன்னணி கேரக்டரில் நடிக்கும் கார்கி படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

தொடர் வெற்றிப் படங்களால் தென்னியந்தியாவில் முன்னணி நடிகையாக மாறி வருகிறார் நடிகை சாய் பல்லவி. இவர் நடனத்தில் வெளிவந்த ரவுடி பேபி பாடல் யூடியூபில் பல சாதனைகளை முறியடித்து வருகிறது.

தெலுங்கில் நாக சைதன்யாவுடன் சாய் பல்லவி லவ் ஸ்டோரி என்ற படத்தில் நடித்திருப்பார். இந்தப் படம் நடனத்தை மையமாகக் கொண்டது. இதிலும் தனது நடனம் மற்றும் நடிப்பு திறமையை வெளிப்படுத்தி தெலுங்கு ரசிகர்களை சாய் பல்லவி கவர்ந்தார்.

இதன்பின்னர் தெலுங்கில் வெளியான ஷ்யாம் சிங்கா ராய், விராட பர்வம் படங்களும் சாய் பல்லவிக்கு புகழைத் தேடித் தந்தன.

இதையும் படிங்க - மாதவனின் 'ராக்கெட்ரி' படம் எப்படி இருக்கு.?

இந்நிலையில், நீதிமன்ற காட்சிகளை மையமாக கொண்டு எடுக்கப்பட்டுள்ள கார்கி என்ற படத்தில் சாய் பல்லவி முன்னணி கதாப்பாத்திரத்தில் நடித்திருக்கிறார்.

ரவிச்சந்திரன் ராமச்சந்திரன், ஐஸ்வர்யா லெக்ஷ்மி, தாமஸ் ஜார்ஜ் மற்றும் கௌதம் ராமச்சந்திரன் ஆகியோர் தயாரித்துள்ள இப்படம் தமிழ், தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகளில் இம்மாதம் 15ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

நடிகர் காளி வெங்கட் முக்கிய கேரக்டரில் நடித்துள்ள இந்தப் படத்தை கவுதம் ராமச்சந்திரன் எழுதி இயக்கியுள்ளார்.

கார்கி படத்தின் தமிழ், தெலுங்கு, கன்னடம் மொழி வெளியீட்டிற்கான டப்பிங்கை சாய் பல்லவியே பேசியுள்ளார்.

இதையும் படிங்க - இந்தியன் 2 படப்பிடிப்பு எப்போது தொடங்கும்? புதிய தகவலால் பரபரப்பு

தமிழில் கடந்த 2017-ல் நிவின் பாலி நடிப்பில் வெளியான ரிச்சி படத்தை இயக்கிய கவுதம் ராமச்சந்திரன்தான் கார்கி படத்தின் இயக்குனர். ரிச்சி எதிர்பார்த்த வெற்றியை அளிக்காத நிலையில், கார்கி வெற்றி பெறும் என்ற நம்பிக்கையில் இயக்குனர் உள்ளார்.

top videos

    கார்கி படத்தின் தமிழ் வெர்ஷனை சூர்யா – ஜோதிகாவின் 2டி என்டர்டெய்ன்மென்ட்ஸ் நிறுவனம் வெளியிடுகிறது.

    First published:

    Tags: Actress sai pallavi