• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • ’மாணவர்களின் வலியை உணர்கிறேன்’ நீட் தேர்வுக்கு எதிராக சாய் பல்லவி கருத்து!

’மாணவர்களின் வலியை உணர்கிறேன்’ நீட் தேர்வுக்கு எதிராக சாய் பல்லவி கருத்து!

சாய் பல்லவி

சாய் பல்லவி

”மருத்துவ படிப்பு என்பது கடல் போன்றது. அதில் நுழைவு தேர்வு வைப்பது மாணவர்களை மனதளவில் பாதிக்க வைக்கும்.”

  • Share this:
    மருத்துவ படிப்பிற்கு நீட் தேர்வு தேர்வு தேவையில்லை என நடிகையும் மருத்துவருமான சாய் பல்லவி தெரிவித்துள்ளார்.

    மருத்துவ படிப்புக்கான நுழைவுத் தேர்வான நீட் தேர்வை கடந்த சில ஆண்டுகளாக மத்திய அரசு நடத்தி வருகிறது. இதற்கு தமிழகத்தில் அரசியல் கட்சியினரும், பொது மக்களும் பலமான எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

    இந்நிலையில் நீட் தேர்வு வேண்டாம் என மருத்துவரும் நடிகையுமான சாய்பல்லவி தெரிவித்துள்ளார். இது குறித்து பேசிய அவர். ’மருத்துவ படிப்பு என்பது கடல் போன்றது. அதில் நுழைவு தேர்வு வைப்பது மாணவர்களை மனதளவில் பாதிக்க வைக்கும். பெற்றோர்களும் நண்பர்களும் தான் மாணவர்களுடன் பேசி நம்பிக்கையை ஊட்ட வேண்டும் .

    என் குடும்பத்திலும் நீட் தற்கொலை சோகம் நிகழ்ந்திருக்கிறது. மதிப்பெண் குறைந்து விட்டதால் எனது உறவினர் ஒருவர் தற்கொலை செய்து கொண்டார். இத்தனைக்கும் அவர் மோசமான மதிப்பெண் எடுக்கவில்லை. ஆனால் அவருக்கு தாழ்வு மனப்பான்மை ஏற்பட்டு விட்டது. அதனால் அவர் அத்தகைய முடிவை எடுத்துவிட்டார்.

    தற்கொலை செய்து கொள்ளாதீர்கள் என்று என்னால் எளிதில் பேசிவிட முடியும். ஆனால் அந்த இடத்தில் இருப்பவர்களுக்கு தான் அதன் வலி தெரியும். அந்த தேர்வை அவர்கள் எந்த நிலையில் இருந்து எழுதினார்கள் என்று பார்க்க வேண்டும்.

    பதினெட்டு வயது கூட ஆகாத மாணவர்கள் இவ்வளவு இளம் வயதிலேயே தற்கொலை செய்து கொண்டார்கள் என்பது வேதனை அளிக்கிறது. மாணவர்களின் வலியை உணர்கிறேன். பிரச்சினைகளையும் உணர்கிறேன். நான் எப்போதும் அவர்கள் பக்கம் தான்’ என்று தெரிவித்துள்ளார். சாய் பல்லவியின் இந்த கருத்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    தவிர தமிழ், மலையாளம், தெலுங்கில் நடித்து வரும் சாய் பல்லவிக்கு ரசிகர்கள் அதிகம். அவர் சமீபத்தில் நாக சைத்தன்யாவுடன் லவ் ஸ்டோரி திரைப்படம் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்று வருவது குறிப்பிடத்தக்கது.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Shalini C
    First published: