விஜய் சேதுபதி படத்தில் இணைந்த சாய் தன்ஷிகா! - அதிகாரப்பூர்வ அறிவிப்பு

news18
Updated: August 13, 2019, 1:16 PM IST
விஜய் சேதுபதி படத்தில் இணைந்த சாய் தன்ஷிகா! - அதிகாரப்பூர்வ அறிவிப்பு
news18
Updated: August 13, 2019, 1:16 PM IST
விஜய்சேதுபதியின் ‘லாபம்’ படத்தில் நடிகை சாய் தன்ஷிகா இணைந்துள்ளார்.

விஜய் சேதுபதி, ஆர்யா நடிப்பில் கடந்த 2015-ம் ஆண்டு வெளியான படம் புறம்போக்கு என்கிற பொதுவுடைமை. இந்தப் படத்தை இயக்குநர் எஸ்.பி.ஜனநாதன் இயக்கினார். இந்தப் படத்தை அடுத்து மீண்டும் ஜனநாதன் இயக்கத்தில் விஜய் சேதுபதி லாபம் என்ற படத்தில் நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக நடிகை ஸ்ருதிஹாசன் நடிக்கிறார். இவர்களுடன் வில்லன் கதாபாத்திரத்தில் நடிகர் ஜெகபதி பாபு நடிக்கிறார்.

கடந்த ஏப்ரல் மாதத்தில் தொடங்கிய படத்தின் படப்பிடிப்பு தென்காசி, அம்பாசமுத்திரம் உள்ளிட்ட பகுதிகளில் நடைபெற்று வந்தது. இந்நிலையில் இந்தப் படத்தில் நடிகை சாய் தன்ஷிகா இணைந்துள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.

7சி.எஸ் என்டர்டெயின்மெண்ட் நிறுவனம் சார்பில் ஆறுமுககுமார் தயாரிக்கும் இந்தப் படத்துக்கு டி.இமான் இசையமைக்கிறார். விரைவில் இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகும் என்றும் படக்குழு தெரிவித்துள்ளது.



வீடியோ பார்க்க: ரஜினிக்கு ஆதரவும்... எதிர்ப்பும்...

First published: August 13, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...