நிர்வாணமாக நடிக்கச் சொன்னார் - ராஜ் குந்த்ரா மீது நடிகை பரபரப்பு புகார்

ராஜ் குந்த்ரா மீது நடிகை பரபரப்பு புகார்

ராஜ் குந்த்ராவுடன் போலீசார் கைது செய்த நபர்களில் சகரிகா குற்றம்சாட்டியிருந்த ராஜ் குந்த்ராவின் அசிஸ்டெண்ட் உமேஷ் கம்மத்தும் ஒருவர் என்பது முக்கியமானது.

 • Share this:
  ஆபாச படம் தயாரித்து, விநியோகித்ததாக நடிகை ஷில்பா ஷெட்டியின் கணவரும் தொழிலதிபருமான ராஜ் குந்த்ராவை கடந்த 19 ஆம் தேதி மும்பை போலீசார் கைது செய்தனர்.

  தற்போது அவர் ரிமாண்டில் உள்ளார். இந்நிலையில் நடிகையும், மாடலுமான சகரிகா சோனா சுமன், ராஜ் குந்த்ரா ஆடிசனின்  போது நிர்வாணமாக நடிக்கச் சொன்னதாக வெளியிட்ட வீடியோ வைரலாகி வருகிறது. இந்த வருட ஆரம்பத்தில் ராஜ் குந்த்ராவின் அசிஸ்டெண்ட் உமேஷ் கம்மத் இயக்கும் வெப்சீரிஸ் ஒன்றின் ஆடிசனில் வீடியோ கால் மூலம் கலந்து கொண்டிருக்கிறார் சகரிகா.

  அப்போது கம்மத்துடன் மூன்று பேர் இருந்துள்ளனர். கம்மத் அடிக்கடி ராஜ் குந்த்ராவின் பெயரை அப்போது பயன்படுத்தியுள்ளார், அவர்தான் வெப் சீரிஸை தயாரிக்கப் போவதாகவும் கூறியுள்ளார். இந்த ஆடிசனின் போது நிர்வாணமாக தோன்றும்படி அந்த மூன்று பேரும் கேட்டிருக்கின்றனர். அதிர்ந்து போன சகரிகா முடியாது என்று அப்போதே ஆடிசனிலிருந்து வெளியேறியுள்ளார்.

  ALSO READ |  தெலுங்கு படத்தின் ரீமேக்கில் துப்பறிவாளராக நடிக்கும் சந்தானம்..

  வீடியோ காலில் வந்த மூன்று பேரில் கம்மத்தை சகரிகாவால் சரியாக அடையாளம் காட்ட முடிகிறது. மற்ற இருவரில் ஒருவர் நிச்சயம் ராஜ் குந்த்ராவாகதான் இருக்க வேண்டும் என பிப்ரவரி மாதம் சகரிகா ஒரு வீடியோ வெளியிட்டிருந்தார்.  ஆபாச பட வழக்கில் ராஜ் குந்த்ரா கைதான நிலையில் அந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. ராஜ் குந்த்ராவுடன் போலீசார் கைது செய்த நபர்களில் சகரிகா குற்றம்சாட்டியிருந்த ராஜ் குந்த்ராவின் அசிஸ்டெண்ட் உமேஷ் கம்மத்தும் ஒருவர் என்பது முக்கியமானது.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
  Published by:Sankaravadivoo G
  First published: