Roja: இளைஞர்களுடன் கபடி விளையாடிய ரோஜா - கவனம் ஈர்க்கும் வீடியோ!

Roja: இளைஞர்களுடன் கபடி விளையாடிய ரோஜா - கவனம் ஈர்க்கும் வீடியோ!

கபடி விளையாடிய ரோஜா

ஜெகன் மோகன் ரெட்டி தலைமையிலான ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் கட்சியில் நகரி தொகுதி எம்.எல்.ஏ.வாக இருக்கிறார் ரோஜா.

  • Share this:
    இளைஞர்களுடன் நடிகை ரோஜா கபடி விளையாடும் வீடியோ இன்ஸ்டாகிராமில் கவனம் ஈர்த்துள்ளது.

    தமிழில் செம்பருத்தி படம் மூலம் அறிமுகமானவர் நடிகை ரோஜா. 1990-களில் முன்னணி கதாநாயகியாக வலம் வந்த இவர், உழைப்பாளி, அதிரடி படை, சூரியன், வீரா, உன்னிடத்தில் என்னை கொடுத்தேன் உள்பட பல வெற்றி படங்களில் நடித்துள்ளார்.



     




    View this post on Instagram





     

    A post shared by andradam (@andradam4u)






    தெலுங்கிலும் ஏராளமான படங்களில் நடித்த இவர் இயக்குநர் ஆர்.கே.செல்வமணியை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு 2 மகள்கள் இருக்கிறார்கள். திருமணத்துக்குப் பிறகு நடிப்பை குறைத்து, அரசியலில் ஆர்வம் காட்ட தொடங்கினார். தற்போது ஆந்திராவில் ஆட்சியில் இருக்கும் ஜெகன் மோகன் ரெட்டி தலைமையிலான ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் கட்சியில் நகரி தொகுதி எம்.எல்.ஏ.வாக இருக்கிறார் ரோஜா.

    இந்நிலையில் நகரி தொகுதியில் கபடி போட்டியை தொடங்கி வைக்க சென்ற அவருக்கு மக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். அதன் பிறகு யாரும் எதிர்பார்க்காத வேளையில் திடீரென கிரவுண்டில் இறங்கி இளைஞர்களுடன் கபடி விளையாடினார். இதை சற்றும் எதிர்பார்க்காத அப்பகுதி மக்கள் உற்சாகத்தில் ஆரவாரம் செய்தனர்.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Shalini C
    First published: