Home /News /entertainment /

விமான விபத்தில் நூலிழையில் தப்பிய நடிகை ரோஜா... என்ன நடந்தது? கணவர் செல்வமணி விளக்கம்

விமான விபத்தில் நூலிழையில் தப்பிய நடிகை ரோஜா... என்ன நடந்தது? கணவர் செல்வமணி விளக்கம்

ரோஜா - செல்வமணி

ரோஜா - செல்வமணி

நடிகை ரோஜாவின் கணவர் செல்வமணி நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சிக்கு பிரத்யேக பேட்டியளித்தார்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
    நடிகை ரோஜா பயணம் செய்த விமானம் விமானியின் சாதுரியத்தால் விபத்தில் இருந்து தப்பிய நிலையில் இந்த சம்பவம் தொடர்பாக செல்வமணி நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சிக்கு பிரத்யேக தகவல் அளித்துள்ளார்.

    நடிகை ரோஜா ராஜமுந்திரியில் இருந்து திருப்பதி சென்ற விமானம் திடீர் கோளாறு காரணமாக தரை இறங்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. விமானத்தை இயக்கிய விமானி சாதுர்யமாக செயல்பட்டதால் விமானம் விபத்தில் இருந்து தப்பி உள்ளது. திருப்பதியில் தரை இறங்க வேண்டிய விமானம் பெங்களூக்கு திருப்பி அனுப்பி வைக்கப்பட்டது.

    Also Read : நடிகர் அர்ஜுனுக்கு கொரோனா தொற்று உறுதி

    இந்நிலையில் நடிகை ரோஜாவின் கணவர் செல்வமணி நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சிக்கு பிரத்யேக பேட்டியளித்தார். அப்போது, இந்த சம்பவம் தொடர்பான முழு தகவலும் தற்போது எனக்கு தெரியவில்லை. வாட்ஸ் அப்பில் வந்த செய்தியை அடுத்து ரோஜாவுக்கு நான் கால் செய்தேன்.

    அவர் விமானம் பெங்களூருவில் தரை இறங்கி உள்ளதாகவும் இன்னும் கதவு திறக்கவில்லை, நான் பின்னர் பேசுகிறேன் என்று சொன்னதாக தெரிவித்தார். மேலும் அவர் அலுவலக காரணமாகவே விமானத்தில் பயணித்ததாகவும், குடும்ப உறுப்பினர்கள் வேறு யாரும் அவருடன் பயணிக்கவில்லை என்றும் தெரிவித்தார்.
    Published by:Vijay R
    First published:

    Tags: Actress Roja

    அடுத்த செய்தி