ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

‘நிறைய சந்தோஷங்களை மிஸ் செய்துவிட்டார்’ – ரகுவரன் குறித்து மனம் திறக்கும் ரோகினி

‘நிறைய சந்தோஷங்களை மிஸ் செய்துவிட்டார்’ – ரகுவரன் குறித்து மனம் திறக்கும் ரோகினி

ரகுவரன் - ரோகினி

ரகுவரன் - ரோகினி

ரகுவரனுக்கு நட்பு வட்டாரங்கள் குறைவு. ஆனால் அவரது பாடல் சிடி கலெக்சன் என்னிடம் இன்னும் உள்ளது. அவர் நிறைய இசை கேட்பார். – ரோகினி

 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :
 • Tamil Nadu, India

  நிறைய சந்தோஷமான தருணங்களை ரகுவரன் மிஸ் செய்து விட்டதாக அவரது முன்னாள் மனைவியும் நடிகையுமான ரோகினி பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.

  தமிழ் சினிமாவின் லெஜெண்டரி வில்லன்களில் ஒருவராக இருந்தவர் ரகுவரன். வில்லன் மட்டுமின்றி முகவரி, வேலையில்லா பட்டதாரி உள்ளிட்ட படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்து நெஞ்சில் நீங்காத இடத்தை பிடித்திருப்பார். வில்லன்களில் குறிப்பாக பாஷா படத்தில் அவர் ஏற்று நடித்த மார்க் ஆன்டனி கேரக்டர் காலத்திற்கும் நின்று பேசும்.

  பர்சனல் வாழ்க்கையில் ரகுவரன் நடிகை ரோகினையை கடந்த 1996-ல் திருமணம் முடித்தார். இந்த தம்பதிக்கு ரிஷிவரன் என்ற மகன் உள்ளார். 2004-ல் ரகுவரனும் ரோகினியும் விவகாரத்து பெற்று பிரிந்தனர். உடல் நலக்குறைபாடு காரணமாக ரகுவரன் தனது 49-வது வயதில் 2008-ஆம் ஆண்டு உயிரிழந்தார்.

  இந்நிலையில் முன்னாள் கணவர் ரகுவரன் குறித்து நடிகை ரோகினி நேர்காணல் ஒன்றில் பேசியதாவது- மகன் ரிஷி மற்றும் ரகுவரனை சேர்த்து நான் அதிகம் ஃபோட்டோ எடுத்துள்ளேன். நானும் ரகுவரனும் ரிஷியை அதிக முறை ஃபோட்டோ எடுப்போம். அந்த தருணங்கள் மறக்க முடியாது.

  பூஸான் சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்படும் கமலின் விக்ரம்…

  அந்த நேரத்தில் என்னுடைய ஃபோட்டோக்கள் கம்மியாகத்தான் இருக்கும். ஜப்பானில் ரஜினிகாந்த் ரசிகர்களாக இருப்பவர்கள் ரகுவரனுக்கும் ரசிகர்களாக இருந்தனர். ரகுவரனின் ஷூ, கண்ணாடி உள்பட அனைத்தையும் அவர்கள் ஃபோட்டோ எடுப்பார்கள்.ரகுவரனுக்கு நட்பு வட்டாரங்கள் குறைவு. ஆனால் அவரது பாடல் சிடி கலெக்சன் என்னிடம் இன்னும் உள்ளது. அவர் நிறைய இசை கேட்பார்.

  சிரஞ்சீவியின் காட் ஃபாதருடன் மோதும் நாகார்ஜுனாவின் கோஸ்ட்... டோலிவுட்டில் பரபரப்பு

  இப்போது சோஷியல் மீடியாவின் தாக்கம் அதிகம் உள்ளது. இந்த நேரத்தில் ரகுவரனின் சின்ன சின்ன அசைவுகள், டயலாக் டெலிவரி, நடிப்பை சினிமா ரசிகர்கள் அதிகம் விரும்புகின்றனர். இதை அவர் தெரிந்திருந்தால் என்றால் அவர் மிகவும் சந்தோஷம் அடைந்திருப்பார். இந்த தருணங்களை அவர் மிஸ் செய்து விட்டார்.

  ஒரேயொரு சாவித்ரி, ஒரேயொரு எஸ்.வி. ரங்கா ராவ், ஒரேயொரு சந்திரபாபு. அதைப் போன்று ஒரேயொரு ரகுவரன் என நான் அடிக்கடி அவரிடம் சொல்வேன். அவருக்கு இந்த தைரியம் போதுமானதாக இல்லை. அவருக்கு இன்னும் எல்லோரும் தைரியம் கொடுக்க வேண்டியிருந்தது.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

  Published by:Musthak
  First published:

  Tags: Kollywood