ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

Rohini: கிஷோர் கே சாமி மீது நடிகை ரோகினி போலீஸில் புகார்

Rohini: கிஷோர் கே சாமி மீது நடிகை ரோகினி போலீஸில் புகார்

ரோகினி - கிஷோர் கே சாமி

ரோகினி - கிஷோர் கே சாமி

இந்த தவறான கருத்துகளால் தனக்கு மன உளைச்சல் ஏற்பட்டாதாகக் குறிப்பிட்டுள்ளார்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :

தன்னை பற்றியும், மறைந்த நடிகர் ரகுவரன் குறித்தும் இழிவான கருத்தை பதிவிட்ட கிஷோர் கே சாமி மீது நடவடிக்கை எடுக்கக்கோரி நடிகை ரோகினி புகார் அளித்துள்ளார்.

திரைப்பட நடிகையும், மறைந்த நடிகர் ரகுவரனின் மனைவியுமான ரோகினி ஆன்லைன் மூலமாக பாஜக ஆதரவாளரான கிஷோர் கே சாமி மீது புகார் ஒன்றை அளித்துள்ளார்.

அதில், கடந்த 2014-ஆம் ஆண்டு கிஷோர் கே சாமி, தனது வலைதள பக்கத்தில் மறைந்த நடிகர் ரகுவரன் மற்றும் தன்னை பற்றியும் இழிவுப்படுத்தும் வகையில் கருத்தை பதிவிட்டிருந்தார். இந்த தவறான கருத்துகளால் தனக்கு மன உளைச்சல் ஏற்பட்டாதாகவும், இதே போல் பாஜக மூத்த தலைவர்களான பொன்.ராதாகிருஷ்ணன், இல கணேசன், வானதி ஸ்ரீனிவாசன், தமிழிசை சவுந்திரராஜன் ஆகியோர் குறித்தும் அவதூறு பரப்பும் வகையில் கருத்துகளை பதிவிட்டிருந்தார். இதனால் கிஷோர் கே சாமி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் குறிப்பிட்டுள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

ஏற்கெனவே கிஷோர் கே சாமி முன்னாள் முதல்வர்கள் குறித்தும், பெண் பத்திரிக்கையாளர் குறித்தும் அவதூறு பரப்பும் வகையில் கருத்துகளை பதிவிட்டதாக போலீசாரால் கைது செய்யப்பட்டு சிறையில் இருப்பது குறிப்பிடத்தக்கது. இதனை தொடர்ந்து விசிக துணை பொதுசெயலாளர் வன்னியரசு மற்றும் நடிகை ரோகினி ஆகியோர் மேலும் கிஷோர்.கே.சாமி மீது புகார் அளித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

First published:

Tags: Actress Rohini, Tamil Cinema