இறுதிச்சுற்று நடிகை ரித்திகா சிங், நடித்துள்ள இசை வீடியோ இணையத்தில் வேகமாக டிரெண்டாகி வருகிறது.
ரித்திகா சிங் இயக்குனர் சுதா கொங்கரா இயக்கத்தில் மாதவன் நடித்த இறுதிசுற்று திரைப்படத்தின் மூலம் திரையுலகில் கதாநாயகியாக அறிமுகமானார். இதனைத் தொடர்ந்து இயக்குனர் மணிகண்டன் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடித்த ஆண்டவன் கட்டளை திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்தார்.
இதனை தொடர்ந்து சிவலிங்கா, ஓ மை கடவுளே உள்ளிட்ட திரைப்படங்களிலும் ரித்திகா சிங் நடித்தார். மேலும், பாக்சர், பிச்சைக்காரன் 2, வணங்காமுடி, கொலை ஆகிய திரைப்படங்களிலும் ரித்திகா சிங் தற்போது நடித்து வருகிறார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
இந்நிலையில் ரித்திகா சிங்கின் நடிப்பில் தயாராகியுள்ள புதிய மியூசிக் வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது. . Dei என்று தலைப்பிடப்பட்டுள்ள இந்த பாடலின் துவக்கத்தில் ரித்திகாசிங், மதுபானக்கூடத்தில் சென்று மதுகுடிப்பது போன்ற காட்சிகள் இடம்பிடித்துள்ளன.
இன்பராஜ் ராஜேந்திரன் என்பவர் பாடல் வரிகள் எழுதி இசையமைத்துள்ளார். வெளியான சில மணி நேரத்தில் 10 லட்சத்துக்கும் அதிகமானோர் இந்த பாடலை கண்டு ரசித்துள்ளனர்.
Also read... அழகியே... நடிகை அதிதி ராவின் ரீசன்ட் போட்டோஸ்!
Hue Box Studios, ஹம்சினி என்டர்டெயின்மென்ட் இணைந்து வழங்க திங்க் ஸ்பெஷல்ஸ் வெளியிட்ட டேய் மியூசிக் வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Actress Ritika Singh, Music, Ritika singh