அருண் விஜய் நடிக்கும் பாக்ஸர் படத்தில் இணையும் ரித்திகா சிங்!

லியோன் ஜேம்ஸ் இந்தப் படத்துக்கு இசையமைக்கிறார். பீட்டர் ஹெய்ன் ஸ்டண்ட் மாஸ்டராக பணியாற்றவுள்ளார்.

அருண் விஜய் நடிக்கும் பாக்ஸர் படத்தில் இணையும் ரித்திகா சிங்!
ரித்திகா சிங்
  • News18
  • Last Updated: February 11, 2019, 1:57 PM IST
  • Share this:
பாக்ஸர் படத்தில் அருண் விஜய்க்கு ஜோடியாக ரித்திகா சிங் நடிக்கவுள்ளார்.

இறுதிச்சுற்று படத்தில் மாதவனிடம் பாக்ஸிங் பயிலும் கதாபாத்திரத்தில் நடித்து அனைவரது கவனத்தையும் ஈர்த்தவர் ரித்திகா சிங். நிஜ வாழ்க்கையில் பாக்ஸரான இவர் இறுதிச்சுற்று படத்தைத் தொடர்ந்து ஆண்டவன் கட்டளை, சிவலிங்கா உள்ளிட்ட படங்களில் நடித்தார்.

தற்போது விவேக் இயக்கத்தில் அருண் விஜய் நடிக்கும் பாக்ஸர் படத்தில் நாயகியாக நடிக்க ரித்திகா சிங் ஒப்பந்தமாகியுள்ளார். இந்தப் படத்தில் அவர் ஸ்போர்ட்ஸ் செய்தியாளராக நடிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது. எக்ஸ்ட்ரா என்டர்டெயின்மென்ட் தயாரிக்கும் இந்தப் படத்தை இயக்குநர் பாலாவிடம் பணிபுரிந்த விவேக் இயக்குகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
லியோன் ஜேம்ஸ் இந்தப் படத்துக்கு இசையமைக்கிறார். பீட்டர் ஹெய்ன் ஸ்டண்ட் மாஸ்டராக பணியாற்றவுள்ளார். இந்தப் படத்துக்காக நடிகை ரித்திகா சிங் மற்றும் அருண் விஜய் சிறப்பு பயிற்சிகளை மேற்கொண்டதாக இயக்குநர் விவேக் பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.

வெளிநாட்டைச் சேர்ந்த மார்கஸ் லுஜன்பர்க் ஒளிப்பதிவில் ஏப்ரல் மாதத்தில் இந்தப் படத்தின் படப்பிடிப்பு துவங்க உள்ளது.இயக்குநருக்கு நடிகர் கருணாகரன் கொலை மிரட்டல்... நடந்தது என்ன - வீடியோ

First published: February 11, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்