ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

‘படப்பிடிப்பு தளத்தில் ஒரு வினாடி கூட உட்கார மாட்டார்’ – இயக்குனர் தனுஷை பாராட்டும் ரேவதி

‘படப்பிடிப்பு தளத்தில் ஒரு வினாடி கூட உட்கார மாட்டார்’ – இயக்குனர் தனுஷை பாராட்டும் ரேவதி

ரேவதி - தனுஷ்

ரேவதி - தனுஷ்

தனுஷ் தனக்கு இந்த மாதிரியான காட்சிகள் வேண்டும் என்பதில் தெளிவாக இருப்பார். அது கிடைக்கும் வரை யாரையும் விட மாட்டார்

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Tamil Nadu, India

  தனுஷூடன் பவர் பாண்டி படத்தில் பணியாற்றிய அனுபவங்களை பகிர்ந்துக்கொண்ட  நடிகை ரேவதி சில சுவாரசியமான தகவலை  தெரிவித்து, அவரை பாராட்டியுள்ளார்.

  அவர் அளித்துள்ள பேட்டி ஒன்றில் கூறியிருப்பதாவது- மணி சார் தான் எப்படிப்பட்ட காட்சியை படமாக்க வேண்டும் என்பதில் தெளிவாக இருப்பார். நாம் சற்று ஓவர் ஆக்டிங் செய்தாலும்கூட நம்மை கட்டுப்படுத்தி, இவ்வளவு தேவை இல்லை, இது மட்டும் போதும் என்பார்.

  இயக்குனர்கள் அப்படி இருந்தால் தான், நடிகர்களுக்கு நன்றாக இருக்கும். படத்தின் காட்சிகளும் சிறப்பாக அமையும். ஒரு இயக்குனருக்கு எந்த மாதிரியான காட்சிகள் தேவை என்பதை முதல் இரண்டு நாட்களில் நடிகர்கள் உணர்ந்துவிட்டால், அடுத்து வரக்கூடிய நாட்கள் இலகுவாக கடந்துவிடும்.

  80, 90 - களில் நான் செய்த கேரக்டர்கள் அனைத்தும் மிகச்சிறந்த கேரக்டர்கள். அதன் பின்னர் நடிப்பதை குறைத்து விட்டேன். தனுஷ் இயக்கத்தில், பவர் பாண்டி படத்தில் நடித்தது எனக்கு நல்ல அனுபவமாக அமைந்தது.

  தேடித் தேடி அலைய வேண்டாம்.. ஹாட் ஸ்டாரில் இருக்கு சூப்பர் மலையாள படங்கள்!

  கொஞ்சம் டிப்ரஷனில் சென்று கொண்டிருந்த என்னை, பவர் பாண்டி படம் உற்சாக நிலைக்கு தள்ளி, மீண்டும் பழைய நிலைமைக்கு கொண்டு வந்தது. தனுஷ் சிறந்த இயக்குனர். படப்பிடிப்பு தளத்தில் ஒரு வினாடி கூட அவர் உட்கார மாட்டார்.

  அவர் ஷூட்டிங்கிற்கு வந்தாலே, பயங்கர எனர்ஜியாக இருக்கும். தனுஷ் தனக்கு இந்த மாதிரியான காட்சிகள் வேண்டும் என்பதில் தெளிவாக இருப்பார். அது கிடைக்கும் வரை யாரையும் விட மாட்டார்.

  அமேசான் ப்ரைமில் சூப்பர் ஹிட் மலையாளப் படங்கள்! இதோ உங்களுக்கான டாப் 10 லிஸ்ட்!

  பவர் பாண்டி படத்தின் கதையை தனுஷ் என்னிடம் போனில் தான் சொன்னார். ஷூட்டிங் நடந்த ஓரிரு நாட்களிலேயே, தனக்கு முழு திருப்தி ஏற்பட்டு விட்டது, இதுதான் எனக்குத் தேவை என்றார். இயக்குனர்களுடன் முதல் சில காட்சிகளை பண்ணும்போது தான் நமக்கு கொஞ்சம் குழப்பமாக இருக்கும். அதன் பின்னர் எல்லாம் எளிமையாகிவிடும். இவ்வாறு ரேவதி கூறியுள்ளார்.

  Published by:Musthak
  First published:

  Tags: Kollywood