முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / ’ரேவதி சொன்ன கதைக்கு ‘எஸ்’ சொல்லிட்டேன்' - கஜோல் உற்சாகம்!

’ரேவதி சொன்ன கதைக்கு ‘எஸ்’ சொல்லிட்டேன்' - கஜோல் உற்சாகம்!

ரேவதி - கஜோல்

ரேவதி - கஜோல்

ரேவதி இயக்கும் இந்தப் படம் இந்தியில் உருவாகவிருக்கிறது.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :

நடிகை ரேவதி நீண்ட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் படம் இயக்குகிறார்.

தமிழில் இயக்குநர் பாரதி ராஜா இயக்கிய ‘மண்வாசனை’ படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானவர் ரேவதி. தொடர்ந்து கிழக்கு வாசல், தேவர் மகன், மறுபடியும், பிரியங்கா, தலைமுறை போன்ற படங்களில் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தயதற்காக விருதுகளை வென்றார்.

தமிழ் மட்டுமல்லாமல் மலையாளம், தெலுங்கு, கன்னடம் மற்றும் இந்தி படங்களில் நடித்துள்ள ரேவதி, இது வரை நான்கு படங்களையும் இயக்கியுள்ளார். 2010-க்குப் பிறகு படம் இயக்காமல் இருந்த இவர் தற்போது 11 ஆண்டுகள் கழித்து மீண்டும் படம் இயக்க தயாராகியிருக்கிறார். அதற்கான அறிவிப்பு இன்று வெளியாகியுள்ளது.

ரேவதி இயக்கும் இந்தப் படம் இந்தியில் உருவாகவிருக்கிறது. முதன்மை கதாபாத்திரத்தில் கஜோல் நடிக்கும் இந்தப் படத்திற்கு ’த லாஸ்ட் ஹுரா’ என பெயரிடப்பட்டுள்ளது. இது குறித்து உற்சாகமாக ட்விட்டரில் பதிவிட்டிருக்கும் கஜோல், ரேவதி சொன்ன கதைக்கு உடனடியாக ஒப்புக் கொள்வதை தவிர வேறு வழியில்லை என்று தெரிவித்துள்ளர். அதோடு ரேவதி மற்றும் குழுவினருடன் எடுத்துக் கொண்ட படத்தையும் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். இது ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.

உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

First published:

Tags: Actress Revathi