முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / ரிலீஸிற்கு தயாரான ரெஜினாவின் சூர்ப்பனகை படம்...!

ரிலீஸிற்கு தயாரான ரெஜினாவின் சூர்ப்பனகை படம்...!

சூர்ப்பனகை படம்

சூர்ப்பனகை படம்

இதில் ரெஜினாவுடன் மன்சூர் அலிகான், கிஷோர், அர்ச்சனா கவுடா உள்ளிட்ட மேலும் பலர் நடிக்கின்றனர்.

  • News18
  • 1-MIN READ
  • Last Updated :
  • Tamil Nadu, India

திருடன் போலீஸ் படத்தை இயக்கிய கார்த்திக் ராஜு,  தற்போது சூர்ப்பனகை படத்தை எழுதி, இயக்கியுள்ளார். இதில் ரெஜினாவுடன் மன்சூர் அலிகான், கிஷோர், அர்ச்சனா கவுடா உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். சாம் சி.எஸ் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். தமிழ், தெலுங்கு என 2 மொழிகளில் படம் தயாராகி வருகிறது. ராஜசேகர் வர்மா இப்படத்தை தயாரிக்கிறார்.

இது நாயகியை மையப்படுத்திய திரைப்படம். படத்தின் ஃபர்ஸ் லுக் போஸ்டர் 2 ஆண்டுகளுக்கு முன்பே வெளியானது. கதைப்படி ரெஜினா அகழ்வாராய்ச்சி செய்கிறவர். காட்டில் அகழ்வாய்வு மேற்கொள்கையில் ஒரு எலும்புக்கூடு அவர்களுக்கு கிடைக்கிறது. அது யாருடையது என பரிசோதிக்கையில், திடுக்கிடும் உண்மை ஒன்று தெரிய வருகிறது. அதேநேரம், சிலர் மர்மமாக கொல்லப்படுகிறார்கள்.

இந்த கொலைகளுக்கும் கண்டுபிடிக்கப்பட்ட எலும்புக் கூட்டிற்கும் தொடர்பு உள்ளது. அதேபோல் ரெஜினாவுக்கும் தொடர்பு உள்ளது. கடந்த காலத்தில் நடந்த ஒரு கொடூர சம்பவத்தின் தொடர்ச்சியாக இந்த கொலைகள் நடக்கின்றன. அது என்ன என்பதுதான் சூர்ப்பனகை படத்தின் கதை. அந்த எலும்பு கூட்டிற்கும் ரெஜினாவுக்கும் உள்ள தொடர்புதான் படத்தின் மையக் கரு.

இந்நிலையில் இந்தப் படம் கோடை விடுமுறையில் வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளதாக சினிமா வட்டாரங்களில் தகவல்கள் வெளியாகியுள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

First published:

Tags: Tamil cinema news