கேள்விக்கு சரியான பதிலளித்தால் என்னுடன் காபி குடிக்கலாம் - ரெஜினா!

news18
Updated: August 18, 2019, 7:53 PM IST
கேள்விக்கு சரியான பதிலளித்தால் என்னுடன் காபி குடிக்கலாம் - ரெஜினா!
ரெஜினா
news18
Updated: August 18, 2019, 7:53 PM IST
தன்னை சந்திக்க விரும்பும் ரசிகர்களுக்காக சமூகவலைத்தள பக்கத்தில் கேள்வி ஒன்றை பதிவிட்டுள்ளார் நடிகை ரெஜினா. சரியான பதிலளிப்பவர்கள் தன்னுடன் காபி குடிக்கலாம் என்றும் தனது பதிவில் அவர் குறிப்பிட்டுள்ளார்.

கண்ட நாள் முதல் படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமான ரெஜினா, கேடி பில்லா கில்லாடி ரங்கா படத்தில் அமைதியான பெண் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். தொடர்ந்து சரவணன் இருக்க பயமேன், மிஸ்டர்.சந்திரமௌலி உள்ளிட்ட படங்களில் கவர்ச்சியாக களமிறங்கிய ரெஜினா, தெலுங்கு இந்தி படங்களிலும் நடித்து வருகிறார்.

தற்போது இவர் நடிப்பில் தெலுங்கில் வெளியாகியுள்ள படம் எவரு. திரில்லர் ஜானரில் உருவாகியிருக்கும் இந்தப் படத்தில் நடிகை ரெஜினா சமீரா மஹா என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். சமீபத்தில் வெளியான இந்தப் படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது.


இந்நிலையில் படத்தை விளம்பரப்படுத்தும் விதமாக நடிகை ரெஜினா தனது ட்விட்டர் பக்கத்தில் கேள்வி ஒன்றை பதிவிட்டுள்ளார். அந்தக் கேள்விக்கு சரியாக பதிலளிக்கும் ரசிகர்கள் தன்னுடன் காபி குடிக்கலாம் என்றும் கூறியுள்ளார்.வீடியோ பார்க்க: இளையராஜா, ஏ.ஆர். ரகுமான் இசையில் பாட ஆர்வம் - வைக்கம் விஜயலட்சுமி

First published: August 18, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...