23 வயது இளம் நடிகை சடலமாக மீட்கப்பட்டிருப்பது திரையுலகிலும், ரசிகர்களிடையேயும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
23 வயது நடிகை ஒருவர் தனது காதலனுடன் லிவ்-இன் ரிலேஷன்ஷிப்பில் வாடகைக்கு வீடு எடுத்து தங்கியுள்ளார். அந்த வீட்டில் இளம் நடிகை இறந்து கிடந்தது பொழுதுபோக்கு துறையில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. புவனேஸ்வரில் உள்ள நயபள்ளி பகுதியில் இந்த அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது.
ரஜினியின் தீவிர ரசிகர்... சூர்யாவுக்கு குரல் கொடுத்தவர்... விஜய் குறித்து அறியப்படாத தகவல்கள்!
நடிகை ரஷ்மிரேகா ஓஜா ஒடியா தொலைக்காட்சி தொடரான 'கெமிட்டி கஹிபி கஹா' மூலம் புகழ் பெற்றார். ஜூன் 18-ஆம் தேதி, அவர் ஃபோனை எடுக்காததால் அவரது பெற்றோர்கள் கவலைப்பட்டனர். அப்போது தான், சந்தோஷ் பத்ரா, ரஷ்மிரேகாவின் மரணம் குறித்த அதிர்ச்சித் தகவலை தெரிவித்துள்ளார். சம்பவ இடத்திற்கு விரைந்த பிறகுதான், ரஷ்மிரேகா, சந்தோஷ் பத்ராவுடன் சேர்ந்து வாழ்ந்தது குடும்பத்தினருக்கு தெரிய வந்தது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில்
நியூஸ்18 தமிழ் இணையதளத்தை
இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
தீவிர விஜய் ரசிகர்களுக்கு மட்டுமே இந்த விஷயங்கள் தெரியும்!
ரஷ்மிரேகாவின் மரணத்திற்கு அவரது லிவ்-இன் பார்ட்னர் தான் காரணம் என அவரது பெற்றோர்கள் காவல்துறையில் புகாரளித்துள்ளனர். ஆனால் தனது மரணத்திற்கு யாரும் காரணமில்லை என ரஷ்மி எழுதி வைத்துள்ளதால், இது தற்கொலை தான் என்ற முடிவுக்கு வந்திருக்கும் காவல்துறையினர் பிரேத பரிசோதனை முடிவுகளுக்காக காத்திருக்கிறார்கள்.
மன அழுத்தம் ஏற்பட்டாலோ, தற்கொலை எண்ணம் உண்டானாலோ, அதனை மாற்ற, கீழ்காணும் எண்களுக்கு அழைக்கவும். மாநில உதவி மையம்: 104 சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் - 044 -24640050 இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.