ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

நான் விஜய்யின் தீவிர ரசிகை.. வாரிசு ஆடியோ லாஞ்சில் ராஷ்மிகா கலகல பேச்சு!

நான் விஜய்யின் தீவிர ரசிகை.. வாரிசு ஆடியோ லாஞ்சில் ராஷ்மிகா கலகல பேச்சு!

விஜய் - ராஷ்மிகா

விஜய் - ராஷ்மிகா

Rashmika mandana speech in Varisu audio launch | நடிகர் விஜய்யை பார்த்தி ஐ லைக் யூ என கூறிய படி சிரித்தார் கதாநாயகி ராஷ்மிகா மந்தனா.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu | Chennai [Madras]

நடிகர் விஜய்யின் தீவிர ரசிகை தான் என்று ராஷ்மிகா வந்தனா கூறியுள்ளார்.

வாரிசு படத்தின் பாடல் வெளியீட்டு விழாவில் நடிகை ராஷ்மிகா மந்தனா கலந்து கொண்டு பேசினார். அப்போது இந்த விழாவில் நின்று உங்கள் முன்னால் பேசுகிறேன் என்பதை நம்ப முடியவில்லை. விஜய் நடித்த கில்லி திரைப்படத்தை, என்னுடைய அப்பாவுடன் பார்த்தேன். அதுதான் நான் பார்த்த அவரின் முதல் படம் என கூறினார்.

அதற்குப் பிறகு விஜய் பேசுவதை பார்ப்பது, அவரைப் போலவே நடனமாடுவது, அவரைப் போலவே இமிடேட் செய்வது என இருந்தேன் எனவும் ராஷ்மிகா மந்தனா தெரிவித்தார்.

அதன்பின்பு நான் செல்லும் இடங்களில் உங்களுக்கு பிடித்த நடிகர் யார்? உங்களுடைய Crush யார்? என்று பலரும் கேட்பார்கள். அதற்கு உடனடியாக விஜய்தான் என்று கூறுவேன் என ராஷ்மிகா மந்தனா கூறினார். அத்துடன் I Like You என விஜயை பார்த்து சிரித்தார்.

வாரிசு திரைப்படத்தில் ராஷ்மிகா மந்தனா நாயகியாக நடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

First published:

Tags: Actor Thalapathy Vijay, Actor Vijay, Actress Rashmika Mandanna, Varisu