ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

‘என் மார்பகத்தின் சைஸ் என்னவென்று கேட்டார்’ – முன்னணி இயக்குநர் மீது நடிகை பரபரப்பு புகார்

‘என் மார்பகத்தின் சைஸ் என்னவென்று கேட்டார்’ – முன்னணி இயக்குநர் மீது நடிகை பரபரப்பு புகார்

சாஜித கான் - ராணி சாட்டர்ஜி

சாஜித கான் - ராணி சாட்டர்ஜி

சாஜித் கான் தற்போது இந்தி பிக்பாஸ் சீசன் 16-ல் பங்கேற்றுள்ளார். இவர்மீது கடந்த 2018-ல் 6-க்கும் அதிகமான பெண்கள் #MeToo பாலியல் குற்றச்சாட்டுகளை தெரிவித்திருந்தனர்.

 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :
 • Tamil Nadu, India

  முன்னணி இயக்குனர் சாஜித் கான் மீது பிரபல நடிகை ராணி சாட்டர்ஜி புகார் தெரிவித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

  இந்தி திரையுலகில் முன்னணி இயக்குனராக இருப்பவர் சாஜித் கான். இவர் இயக்கிய ஹவுஸ்புல் படங்கள், ஹிம்மத்வாலா உள்ளிட்ட படங்கள் நல்ல வரவேற்பை பெற்றன.

  சாஜித் கான் தற்போது இந்தி பிக்பாஸ் சீசன் 16-ல் பங்கேற்றுள்ளார். இவர்மீது கடந்த 2018-ல் 6-க்கும் அதிகமான பெண்கள் #MeToo பாலியல் குற்றச்சாட்டுகளை தெரிவித்திருந்தனர். இவர் பிக் பாஸில் பங்கேற்றிருப்பதற்கு ஒரு தரப்பினர் கண்டனம் தெரிவித்து, அவரை வெளியேற்ற வேண்டும் என்று வலியுறுத்தி வருகிறார்கள்.

  இந்நிலையில் பிரபல போஜ்புரி மொழி நடிகை ராணி சாட்டர்ஜி, சாஜித் கான் மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக தொலைக்காட்சி ஒன்றுக்கு அளித்த பேட்டியில் அவர் கூறியிருப்பதாவது-

  ஹிம்மத்வாலா படப்பிடிப்பின்போது சாஜித்தின் டீமை சந்தித்துள்ளேன். அவர்கள் இயக்குனர் என்னுடன் நேரடி தொடர்பில் இருக்க விரும்புவதாக தெரிவித்தனர். பின்னர் அவர் என்னை வீட்டிற்கு அழைத்து சந்திக்க விரும்புவதாக கூறினார்.

  பேட்டக்காளி முதல் கணம் வரை.. இந்த வார ஓடிடி ரிலீஸ் படங்கள் லிஸ்ட்!

  தனியாக வரவேண்டும் என்றும் உடன் யாரையும் அழைத்து வரக் கூடாது எனவும் எனக்கு அவர் உத்தரவிட்டார். ஒரு பெரிய இயக்குனர் அழைக்கிறார் என்பதால் அவர் மீதுள்ள மரியாதை காரணமாக, நான் அவருடைய மும்பை ஜூஹூ வீட்டிற்கு சென்றேன். அங்கு அவர் தனியாக இருந்தார்.

  தோகா தோகா குத்துப் பாடலுக்கு நான் ஆட ஒப்பந்தம் செய்யப் போவதாக தெரிவித்தார். லெஹங்கா அணிய வேண்டும் என்று கூறி காலை காட்டு என்றார். நான் நீண்ட ஆடை அணிந்திருந்ததால் அதை, எனது முட்டு வரை உயர்த்தினேன்.

  ரஜினி, விஜய் வரிசையில் சிவகார்த்திகேயன்… பிரபல விநியோகஸ்தர் அன்புச்செழியன் பாராட்டு…

  பின்னர் எனது மார்பகத்தின் சைஸ் என்ன என்று அவர் கேட்டபோது நான் பயந்து விட்டேன். தொடர்ந்து, ‘வெட்கப் படாதே, பாய் ஃப்ரெண்ட் இருக்கா உனக்கு? எத்தனை முறை செக்ஸ் செய்துள்ளாய்?’ என்று கேட்டார். இது எனக்கு சரியாகப்படவில்லை என்பதால், நான் அவரிடம் இதெல்லாம் எதற்காக கேட்கிறீர்கள் என்றேன். நான் அவரது ஆசைக்கு இணங்கி விடுவேன் என்று எதிர்பார்த்தார். என்னை வலுக்கட்டாயமாக தொட முயன்றார். ஆனால் நான் அங்கிருந்து உடனடியாக வெளியேறி விட்டேன்.

  இவ்வாறு நடிகை ராணி சாட்டர்ஜி தெரிவித்துள்ளார். அவரது பேட்டி இந்தி திரையுலகில் அதிர்வலைகளை ஏற்படுத்தி வருகிறது.

  Published by:Musthak
  First published:

  Tags: Bollywood