ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

நடிப்பு.. தயாரிப்பு... சினிமாவில் மீண்டும் களமிறங்கும் ரம்யா! ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு!

நடிப்பு.. தயாரிப்பு... சினிமாவில் மீண்டும் களமிறங்கும் ரம்யா! ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு!

ரம்யா ஸ்பந்தனா

ரம்யா ஸ்பந்தனா

அவர் தயாரித்து நடிக்கும் ’ஸ்வாதி முத்தின மேலே ஹனியே’ என்ற படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Tamil Nadu, India

  அரசியல் களத்தில் புகுந்து ஒரு ரவுண்டு வந்த நடிகை ரம்யா மீண்டும் சினிமாவுக்கு திரும்புவதாக அறிவித்த நிலையில் தற்போது அவர் தயாரித்து நடிக்கும் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது.

  தென்னிந்திய சினிமாவில் நன்கு அறியப்பட்ட நடிகையாக இருந்தவர் திவ்யா ஸ்பந்தனா. திவ்யா, ரம்யா என்ற பெயரால் பரவலாக அறியப்படுகிறார். தமிழில் சிம்பு நடித்த குத்து படத்தில் அறிமுகம் ஆன இவர் தொடர்ந்து, கிரி, பொல்லாதவன், வாரணம் ஆயிரம் உள்ளிட்ட படங்களில் நடித்தார்.

  2012-ல் காங்கிரஸ் கட்சியில் சேர்ந்த ரம்யாவுக்கு 2013- மாண்டியா மக்களவை தொகுதியில் போட்டியிடும் வாய்ப்பு அளிக்கப்பட்டது. மாண்டியா எம்.பி. தொகுதியில் 2013 இடைத்தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்ற ரம்யா, அடுத்த ஆண்டு நடந்த பொதுத் தேர்தலில் தோல்வி அடைந்தார். தேர்தல் தோல்விக்கு பின்னர், அவரது அரசியல் ஈடுபாடு கணிசமாக குறையத் தொடங்கியது.

  பார்த்திபன், வடிவேலு காம்பினேஷனுக்கு முன்னோடியான பார்த்திபன், கவுண்டமணி கூட்டணி

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  இதையடுத்து 6 ஆண்டுகளுக்கு பின்னர் சினிமாவில் மீண்டும் நடிக்கப்போவதாக ரம்யா கூறியிருந்தார். இந்நிலையில் அவர் தயாரித்து நடிக்கும் ’ஸ்வாதி முத்தின மேலே ஹனியே’ என்ற படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது. இதை ராஜ் பி ஷெட்டி என்பவர் இயக்குவதோடு ஹீரோவாகவும் நடிக்கிறார். படத்திற்கு இசை மிதுன் முகுந்தன்.

  Published by:Shalini C
  First published: