• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • தல, தளபதி பற்றி ஒரே வரியில் நச் பதில் சொன்ன நடிகை ரம்யா பாண்டியன்!

தல, தளபதி பற்றி ஒரே வரியில் நச் பதில் சொன்ன நடிகை ரம்யா பாண்டியன்!

நடிகை ரம்யா பாண்டியன்

நடிகை ரம்யா பாண்டியன்

தற்போது நடிகர் சூர்யாவின் 2டி எண்டெர்டெயின்மெண்ட் நிறுவனத்தின் தயாரிப்பில் வெளியான “ராமே ஆண்டாலும் ராவணே ஆண்டாலும்” திரைப்படத்தில் வீராயி என்ற கிராமத்து பெண் கேரக்டரில் மிகவும் இயல்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார் ரம்யா பாண்டியன்.

  • Share this:
பிரபல டைரக்டர் ராஜுமுருகன் இயக்கத்தில் வெளியான தேசிய விருது பெற்ற ஜோக்கர் திரைப்படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் வெள்ளித்திரை ரசிகர்களுக்கு நன்கு அறிமுகமானவர் நடிகை ரம்யா பாண்டியன். பிரபல நடிகர் அருண் பாண்டியன் இவரது சித்தப்பா ஆவார். எனினும் கடந்த 2015-ஆம் ஆண்டு வெளிவந்த டம்மி டப்பாசு படத்தில் சௌமியா என்ற கேரக்ட்ரில் தான் ரம்யா பாண்டியன் தமிழ் சினிமாவில் முதன் முதலில் அறிமுகமானார். அதன் பிறகே ஜோக்கர் படத்தில் நடித்தார்.

தேசிய விருது பெற்ற திரைப்படத்தில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி தமிழ் ரசிகர்களை கவர்ந்த போதும், அதன் பிறகு திரைத்துறையில் பெரிய வாய்ப்புகள் ஏதும் அவரை தேடி வரவில்லை. ஜோக்கர் படத்தை தொடர்ந்து ஆண்தேவதை படத்தில் சமுத்திரகனியுடன் இணைந்து ஜெசிகா என்ற கேரக்டரில் நடித்தார்.இடையே இவர் தன் வீட்டு மொட்டை மாடியில் எடுக்கப்பட்ட போட்டோஷூட்டின், இடுப்பு கவர்ச்சியை வெளிக்காட்டிய புகைப்படம் ஒன்றின் மூலம் ரசிகர்கள் மத்தியில் மீண்டும் பரபரப்பாக பேசப்பட்டார்.

இன்னும் சொல்ல போனால் ஜோக்கர் படத்திற்காக இவர் பேசப்பட்டதை விட, இந்த போட்டோ மூலம் தான் இவர் மிகவும் பிரபலமாகி ரசிகர்களை சென்றடைந்தார். ஒரே போட்டோ மூலம் இவர் மீண்டும் மீடியாவில் பிஸியானார். 2019-ம் ஆண்டில் விஜய் டிவி-யின் பிரபல சமயல் ரியாலிட்டி ஷோவான குக் வித் கோமாளியில் பங்கேற்றதன் மூலம் ரசிகர்கள் மத்தியில் மேலும் பிரபலமானார். தொடர்ந்து மிகப்பெரிய ரியாலிட்டி ஷோவான பிக்பாஸ் சீசன் 4-ல் பங்கேற்று ரசிகர்களை மேலும் கவர்ந்தார். இந்த போட்டியில் இவர் நான்காம் இடம் பிடித்தார்.

Also read... பிக் பாஸ் வீட்டில் ஆரம்பித்த சண்டை - கடுப்பான சிபி, கண்கலங்கும் ஸ்ருதி!

தற்போது நடிகர் சூர்யாவின் 2டி எண்டெர்டெயின்மெண்ட் நிறுவனத்தின் தயாரிப்பில் வெளியான “ராமே ஆண்டாலும் ராவணே ஆண்டாலும்” திரைப்படத்தில் வீராயி என்ற கிராமத்து பெண் கேரக்டரில் மிகவும் இயல்பான நடிப்பை வெளிப்படுத்தி கவர்ச்சியையும் தாண்டி, தான் ஒரு திறமையான நடிகை என்பதை மீண்டும் வெளிப்படுத்தி இருக்கிறார்.

இதனிடையே நடிகை ரம்யா பாண்டியன் தனது சமீபத்திய பேட்டி ஒன்றில் கோலிவுட்டின் முன்னணி ஸ்டார்களான விஜய் மற்றும் அஜித் பற்றிய தனது எண்ணத்தை பகிர்ந்து கொண்டுள்ளார்.

நடிகர் விஜயை தான் சிறு வயதில் இருந்தே பார்த்து வருவதாகவும் இன்னும் அவர் இளமையாகவே இருப்பதாக குறிப்பிட்டுள்ளார். அதே சமயம் நடிகர் அஜித் தங்கள் வீட் டு குடும்ப விழா ஒன்றில் பங்கேற்ற போது அங்கிருந்த அனைவரிடமும் நின்று பொறுமையாக பேசிவிட்டு சென்றதாகவும் கூறினார். இருவரை பற்றியும் ஒரே வரியில் சொல்வதானால் "தளபதி யங், தல கிங்" என்று கூறி இருக்கிறார் ரம்யா பாண்டியன். இவரது இந்த பதில் தற்போது அஜித் மற்றும் விஜய் ரசிகர்களிடையே வைரலாகி வருகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Vinothini Aandisamy
First published: