Home /News /entertainment /

ஜிம்மில் நடிகை ரம்யா நம்பீசன் தீவிர ஒர்க் அவுட்… லைக்ஸை அள்ளும் வீடியோ

ஜிம்மில் நடிகை ரம்யா நம்பீசன் தீவிர ஒர்க் அவுட்… லைக்ஸை அள்ளும் வீடியோ

ரம்யா நம்பீசன்

ரம்யா நம்பீசன்

ரேஞ்சர் மற்றும் பகீரா ஆகிய படங்களில் ரம்யா நடித்து வருகிறார். சி.எஸ். அமுதன் இயக்கத்தில் விஜய் ஆன்டனி நடித்து வரும் ரத்தம் படத்திலும் ரம்யா நம்பீசன் இடம்பெற்றுள்ளார்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India
    நடிகை ரம்யா நம்பீசனின் ஒர்க் அவுட் வீடியோ ரசிகர்களின் கவனம் ஈர்த்து வருகிறது.  இந்த வீடியோ இன்ஸ்ப்ரேஷனாக இருப்பதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

    சேதுபதி, பீட்சா உள்ளிட்ட படங்களில் நடித்து பிரபலம் அடைந்தவர் ரம்யா நம்பீசன். கேரள மாநிலம் கொச்சினைச் சேர்ந்த ரம்யா, பாடகியாகவும் ரசிகர்களை கவர்ந்துள்ளது.

    தமிழைப் போலவே தென்னிந்திய மொழிகளிலும் நடித்துள்ள ரம்யா நம்பீசன். சமூக வலைதளமான இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருக்கும் ரம்யா, தற்போது ஒர்க் அவுட் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

    கண் பாஷை பேசினால் நான் என்ன செய்வேன்... ராஷி கன்னா நியூ ஆல்பம்!

    இந்த வீடியோ பதிவில், ‘உடல் ஃபிட்டாக இருக்கும் அல்லது ஃபேட்டாக (கொழுப்பாக) இருக்கும். நான் எனக்காக உடற்பயிற்சி செய்கிறேன். மற்றவர்களுக்காகவோ, அல்லது அவர்களின் எதிர்பார்ப்புக்காகவோ நான் இதனை செய்யவில்லை.



     




    View this post on Instagram





     

    A post shared by RAMYA NAMBESSAN (@ramyanambessan)






    ஜிம்முக்கு செல்வது எனது உடலுக்கும் ஆன்மாவுக்கும் மகிழ்ச்சி அளிக்கிறது. உடற்பயிற்சியை விடாமல் செய்வதில்தான் வெற்றி இருக்கிறது. ’ என்று கூறியுள்ளார்.

    ரம்யாவின் இந்த பதிவு லைக்ஸை அள்ளி வருகிறது. தமிழில் ஒருநாள் ஒரு கனவு என்ற படத்தில் ரம்யா அறிமுகம் ஆனார்.

    சூர்யா பட நாயகி க்ரீத்தி ஷெட்டியின் லேட்டஸ்ட் ஃபோட்டோஸ்…

    அடுத்ததாக ரேஞ்சர் மற்றும் பகீரா ஆகிய படங்களில் ரம்யா நடித்து வருகிறார். சி.எஸ். அமுதன் இயக்கத்தில் விஜய் ஆன்டனி நடித்து வரும் ரத்தம் படத்திலும் ரம்யா நம்பீசன் இடம்பெற்றுள்ளார்.

    ரத்தம் படத்தில் ரம்யாவுடன் நந்திதா ஸ்வேதா, மகிமா நம்பியார் என மொத்தம் 3 ஹீரோயின்கள் உள்ளனர்.
    Published by:Musthak
    First published:

    Tags: Kollywood

    அடுத்த செய்தி