குடும்பத்தினருடன் 50-வது பிறந்தநாளைக் கொண்டாடிய ரம்யா கிருஷ்ணன்
நடிகை ரம்யா கிருஷ்ணன் தனது 50-வது பிறந்தநாளை குடும்பத்தினருடன் கொண்டாடியுள்ளார்.

நடிகை ரம்யா கிருஷ்ணன்
- News18 Tamil
- Last Updated: September 15, 2020, 8:31 PM IST
1970-ம் ஆண்டு செப்டம்பர் 15-ம் தேதி பிறந்த நடிகை ரம்யா கிருஷ்ணன் இன்று தனது 50-வது பிறந்தநாளைக் கொண்டாடியுள்ளார்.
தனது 14-வது வயதில் ‘வெள்ளை மனசு’என்ற படத்தில் ஒய்.ஜி.மகேந்திரனுக்கு ஜோடியாக நடித்த ரம்யா கிருஷ்ணன், அதற்கு முன்பாகவே ‘புலரும்போள்’ என்ற மலையாள படத்தில் மம்முட்டி, மோகன்லால் உடன் இணைந்து நடித்தார்.
90-களில் முன்னணி தெலுங்கு நடிகையாக வலம் வந்த ரம்யா கிருஷ்ணன், அம்மன் படங்களிலும் நடித்து அசத்தினார். 1999-ம் ஆண்டு வெளியான ‘படையப்பா’ படத்தில் ரஜினிக்கு வில்லியாக நீலாம்பரி கதாபாத்திரத்தில் நடித்து அனைவரையும் மிரட்டிய ரம்யா கிருஷ்ணனுக்கு தமிழில் தொடர்ந்து வாய்ப்புகள் வந்தன. கமல்ஹாசனுடன் ‘பஞ்சதந்திரம்’ திரைப்படத்தில் நடித்த ரம்யா கிருஷ்ணன் தொலைக்காட்சித் தொடர்களிலும் நடிக்கத் தவறவில்லை. ‘பாகுபலி’ படத்தில் சிவகாமி தேவி கதாபாத்திரத்தில் நடித்து நந்தி, மறைந்த முதல்வர் ஜெயலலிதாவை பிரதிபலிக்கும் ‘குயின்’ வெப் தொடரிலும் தனது சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார். அதேவேளையில் தியாகராஜன் குமாரராஜா இயக்கத்தில் ‘சூப்பர் டீலக்ஸ்’ பாலியல் திரைப்படங்களில் நடிக்கும் நடிகையாக நடித்து பிரமிப்பை ஏற்படுத்தினார்.
2003-ம் ஆண்டு பிரபல தெலுங்கு இயக்குநர் வம்சியை திருமணம் செய்து கொண்டார் ரம்யா கிருஷ்ணன். இவர்களுக்கு ஒரு மகன் உண்டு. 50-வயதைத் தொட்டிருக்கும் ரம்யா கிருஷ்ணன் அதை மறைக்காமல் தனது இன்ஸ்டாகிராம் பதிவில் குறிப்பிட்டு தான் குடும்பத்துடன் பிறந்தநாள் கொண்டாடிய புகைப்படத்தையும் பதிவிட்டுள்ளார். அவருக்கு திரைத்துறை பிரபலங்களும் ரசிகர்களும் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
தனது 14-வது வயதில் ‘வெள்ளை மனசு’என்ற படத்தில் ஒய்.ஜி.மகேந்திரனுக்கு ஜோடியாக நடித்த ரம்யா கிருஷ்ணன், அதற்கு முன்பாகவே ‘புலரும்போள்’ என்ற மலையாள படத்தில் மம்முட்டி, மோகன்லால் உடன் இணைந்து நடித்தார்.
90-களில் முன்னணி தெலுங்கு நடிகையாக வலம் வந்த ரம்யா கிருஷ்ணன், அம்மன் படங்களிலும் நடித்து அசத்தினார். 1999-ம் ஆண்டு வெளியான ‘படையப்பா’ படத்தில் ரஜினிக்கு வில்லியாக நீலாம்பரி கதாபாத்திரத்தில் நடித்து அனைவரையும் மிரட்டிய ரம்யா கிருஷ்ணனுக்கு தமிழில் தொடர்ந்து வாய்ப்புகள் வந்தன.
View this post on Instagram