நடிகை ரைஸாவுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சையில் எந்த குறையும் இல்லை - மருத்துவர் விளக்கம்

மருத்துவர் பைரவி செந்தில்

நடிகர் ரைசாவுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சையில் எந்த விதமான குறையும் இல்லை என்றும் அவர் உள்நோக்கத்துடன் தங்கள் மீது குற்றம் சாட்டுவது மருத்துவர் பைரவி செந்தில் தெரிவித்துள்ளார்.

  • Share this:
கடந்த வாரம் நடிகை ரைசா தன்னுடைய சமூக வலைதளங்களில் முகம் வீங்கி இருப்பது போன்ற ஒரு படத்தை பதிவு செய்து மருத்துவர் பைரவி செந்திலிடம் எடுக்கப்பட்ட சிகிச்சையால் தனது முகம் வீங்கி விட்டதாக குறிப்பிட்டிருந்தார். அதனைத் தொடர்ந்து மருத்துவர் பைரவி செந்தில், ரைசா மூன்று நாட்களில் இது குறித்து மன்னிப்பு கேட்க வேண்டும் அல்லது மானநஷ்ட வழக்கை சந்திக்க நேரிடும் என்று நோட்டீஸ் ஒன்றை அனுப்பியிருந்தார்.

அதற்கு மற்றொரு நோட்டீஸ் மூலம் பதில் அளித்திருந்த ரைஸா, தனது முகத்திற்கு பைரவியின் சிகிச்சையால் தான் இப்படி ஆனது என்றும் அதற்கு ஈடாக ஒரு கோடி ரூபாய் கொடுக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டிருந்தார்.

தற்போது மருத்துவர் பைரவி செந்தில் 5 கோடி ரூபாய் நஷ்ட ஈடு கேட்டு நீதிமன்றத்தின் கதவுகளை தட்டி இருக்கிறார். இதுகுறித்து பேசிய அவர் இதே சிகிச்சையை இதற்கு முன் எங்களிடம் மூன்று முறை எடுத்திருக்கிறார் என்று கூறினார். முகத்தில் அழகு சேர்க்கும் சிகிச்சையை ரைஸா எடுத்துக் கொண்டதாகவும் அவருடைய ஒப்புதலின் பேரில் தான் இந்த சிகிச்சையை கொடுக்கப்பட்டதாகவும் பைரவி செந்தில் பேசினார்.

இந்த சிகிச்சை எடுத்துக் கொண்ட பின் மூன்று நாட்களுக்கு அனைவருக்குமே முகத்தில் வீக்கம் இருக்கும் என்றும் சிகிச்சைக்கு முன்னும் பின்னும் செய்யப்பட வேண்டிய சில விஷயங்களை ரைசாவிற்கு எடுத்துரைத்ததாகவும் அதை செயல்படுத்தாமல் மீறினால் பக்க விளைவுகள் வரும் என்றும் பைரவி செந்தில் தெரிவித்தார்.தங்களுடைய மருத்துவமனையின் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையிலும் உள்நோக்கத்துடன் நடிகை ரைஷா செயல்பட்டு இருப்பதால் நஷ்டஈடாக அவர் 5 கோடி ரூபாய் கொடுக்க வேண்டும் என நீதிமன்றத்தில் மனு கொடுத்திருக்கிறார் மருத்துவர் பைரவி செந்தில்.


உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
Published by:Sheik Hanifah
First published: