• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • நடிகை ரைஸா மூன்று நாட்களில் மன்னிப்புக் கேட்க வேண்டும் - சிகிச்சையளித்த டாக்டர் நோட்டீஸ்

நடிகை ரைஸா மூன்று நாட்களில் மன்னிப்புக் கேட்க வேண்டும் - சிகிச்சையளித்த டாக்டர் நோட்டீஸ்

ரைஸா | மருத்துவர் பைரவி செந்தில்

ரைஸா | மருத்துவர் பைரவி செந்தில்

நடிகை ரைசாவின் முகவீக்கப் பிரச்னை அடுத்தகட்டத்தை எட்டியுள்ளது. தவறான முகப்பொலிவு சிகிச்சை அளித்ததற்காக ஒரு கோடி ரூபாய் நஷ்ட ஈடு கோரி, மருத்துவர் பைரவி செந்திலுக்கு ரைசா வக்கீல் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.

  • Share this:
    நடிகை ரைசா வில்சன், வேலையில்லா பட்டதாரி 2, பியர் பிரேமா காதல், தனுசு ராசி நேயர்களே, வர்மா போன்ற தமிழ்ப் படங்களில் நடித்தவர். தொடர்ந்து எப்ஐஆர், காதலிக்க நேரமில்லை ஆகிய படங்களிலும் நடித்து வருகிறார். தமிழில் பிக்பாஸ் முதல் சீசனில் போட்டியாளராகப் பங்கேற்று புகழ் பெற்றவர்.

    மாடலிங், படிப்பு என பிசியாக இருக்கும் ரைசா, சென்னை ஆழ்வார்பேட்டை வீனஸ் காலனியில் மருத்துவர் பைரவி செந்தில் என்பவரிடம் முகப்பொலிவு சிகிச்சைக்காக சென்றுள்ளார்

    மார்ச் 25ம் தேதி மருத்துவர் வனிதா என்பவரும், மணி என்பவரும் இணைந்து போடாக்ஸ் என்ற சிகிச்சை அளித்துள்ளனர். அதற்கு கட்டணமாக 62 ஆயிரத்து 500 ரூபாய் செலுத்தியுள்ளார் ரைசா. 10 நாட்களுக்குப் பின்னரும் எவ்வித முன்னேற்றமும் இல்லாததால், மீண்டும் மருத்துவர் பைரவி செந்திலை அணுகியுள்ளார். டெர்மா பில்லர்ஸ் என்ற சிகிச்சைக்கு மருத்துவர் பைரவி பரிந்துரைத்துள்ளார்.

    ரைஸா வில்சன்


    முதலிலேயே அந்த சிகிச்சைக்கு ஏன் பரிந்துரைக்கவில்லை, பணம் பறிப்பதுதான் நோக்கமா என கேள்வி எழுப்பியுள்ளார் ரைசா
    பின்னர் ஏப்ரல் 17ம் தேதி டியர் ஃப்ரீ ஃபில்லர் என்ற சிகிச்சையை மருத்துவர் பைரவியே அளித்துள்ளார். அதற்கு கட்டணமாக 65 ஆயிரம் ரூபாய் செலுத்தியுள்ளார் ரைசா. இந்த சிகிச்சைக்குப் பின்னர் தான் ரைசாவின் வலது கண் மற்றும் கன்னத்தில் இருந்து ரத்தக் கசிவு ஏற்பட்டதுடன் முகம் வீங்கியுள்ளது

    தனது வீங்கிய முகத்துடன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படத்தைப் பதிவு செய்த ரைசா, மருத்துவர் பைரவி மீது குற்றம்சாட்டியிருந்தார். தான் கேட்ட சிறிய அளவிலான சிகிச்சைக்கு மாறாக வேறு சிகிச்சையை வலுக்கட்டாயமாக அளித்ததால் தான் தனது முகம் பாதிப்புக்குள்ளானதாக அவர் தெரிவித்திருந்தார். இதையடுத்து மருத்துவர் பைரவியை அவர் தொடர்பு கொண்டபோது அவர் ஊரில் இல்லை என தெரிவிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது

    அதனால் கோபமடைந்த நடிகை ரைசா, தவறான முகப்பொலிவு சிகிச்சை அளித்ததற்காக, ஒரு கோடி ரூபாய் நஷ்ட ஈடு அளிக்க வேண்டும் எனக் கோரி மருத்துவர் பைரவிக்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பியுள்ளார். ரைசா சார்பில் அவரது வழக்கறிஞர் ஹரிஹர அருண் சோமசங்கர் அந்த நோட்டீசை அனுப்பியுள்ளார்

    மருத்துவர் பைரவியிடம் விளக்கம் பெற ரைசா முயன்றும், சந்திக்க மறுத்துவிட்டதாகவும் நோட்டீசில் சுட்டிக்காட்டியுள்ளார்.15 நாட்களுக்குள் இழப்பீட்டுத் தொகையை கொடுக்காவிட்டால், சிவில் மற்றும் கிரிமினல் வழக்குகள் மூலம் நீதிமன்றத்தை நாடி நிவாரணம் பெற வேண்டியிருக்கும் என அந்த நோட்டீசில் நடிகை ரைசா எச்சரிக்கை விடுத்துள்ளார். இதுதொடர்பாக ரைசாவைத் தொடர்பு கொண்டபோது தான் தற்போது பேட்டியளிக்கும் மனநிலையில் இல்லை என்றும் விரைவில் விளக்கம் தருவதாகவும் கூறினார்

    தேவையற்ற அவதூறு பரப்புவதாகவும், மானநஷ்ட ஈடாக 5 கோடி ரூபாய் செலுத்த எனவும் மருத்துவர் பைரவி செந்தில் தரப்பு பதில் நோட்டீஸ் அனுப்பியுள்ளனர். மேலும் சிகிச்சை குறித்து அவதூறு பரப்பியதற்காக நடிகை ரைசா மூன்று நாட்களில் எழுத்துப்பூர்வ மன்னிப்பு கேட்டு, சமூக வலைதளங்களில் வெளியிட வேண்டுமெனவும் மன்னிப்பு கேட்காவிட்டால் மான நஷ்ட ஈடு கேட்டு வழக்கு தொடர நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் பைரவியின் வழக்கறிஞர் ஆர். நாகேஷ்வரராவ் தெரிவித்துள்ளார்.

    வாடிக்கையாளர் மத்தியில் உள்ள நற்பெயரை சீர்குலைக்கும் நோக்கில் ரைசா நாடகம் ஆடுவதாகவும், ரைசாவிற்கு ஏற்பட்டது பயப்படக்கூடிய பக்கவிளைவுகள் இல்லை. அரிதாக ஏற்படக்கூடியது. இயற்கையாகவே குணமடையும் என்றும் மருத்துவர் பைரவி செந்தில் தெரிவித்துள்ளார்.

    இரு தரப்பும் மாறி மாறி வக்கீல் நோட்டீஸ் அனுப்பிக்கொண்டிருக்கும் வேலையில் தனது உடல்நிலை குறித்து நடிகை ரைசா வெளிப்படையாக அறிவிக்க வேண்டும். அழகு சிகிச்சைகளின் போது ஏற்படும் உடல்நலக்குறைபாடுகள் தொடர்பாக தமிழக பொது சுகாதாரத்துறை அதிகாரிகள் குழு அமைத்து விசாரணை நடத்துவது வழக்கம்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Sheik Hanifah
    First published: