Raiza Wilson: 'எனக்கு விருப்பமானதை உடுத்துகிறேன்’ ட்ரோல்களுக்கு ரைசா பதிலடி!

ரைசா வில்சன்

"ஒரு நடிகை பிகினி அணிவது மிகவும் சாதாரண விஷயம். இதைவிட கவனம் செலுத்த வேண்டிய கல்வி போன்ற விஷயங்கள் இங்கு ஏராளம் இருக்கிறது. நான் எனக்கு விருப்பமானதை உடுத்துகிறேன்”.

  • Share this:
    நடிகை ரைசா வில்சன் உள்ளாடை அணியாமல் சட்டை பட்டன்களை திறந்துவிட்டபடி வெளியிட்ட புகைப்படம் நேற்று வைரலானது. இதே மாதிரி இன்னும் புகைப்படங்களை வெளியிடுங்கள் என்று சிலர் ரைசாவை உற்சாகப்படுத்த, வேறு சிலரோ, கலாச்சாரத்துக்கு இழுக்கு என்று எதிர்மறையாக கமெண்ட் செய்திருந்தனர். இவர்களின் எண்ணிக்கையே அதிகமிருந்தது.

    இது குறித்து காட்டமாக கருத்து தெரிவித்துள்ளார் ரைசா வில்சன். "நீங்கள் வெறுப்பை உமிழ்ந்தால் அதன் பொருள் நீங்கள் முழுமையாக எதிர்மறை எண்ணங்களால் நிறைந்திருக்கிறீர்கள் என்று அர்த்தம். இந்த எதிர்மறை எண்ணங்களுடன் வாழ்ந்தால் உங்களால் வாழ்க்கையில் எந்த விஷயத்திலும் மகிழ்ச்சியாக இருக்க முடியாது. இவர்கள் வேண்டுமென்றே எதிர்மறை விஷயங்களில் மட்டும் கவனம் செலுத்துவார்கள். அது அவர்களின் மனதை எதிர்மறை பாதையில் மட்டுமே செலுத்தும். நான் இதுபோன்ற கமெண்ட்களை படிப்பதில்லை. கடந்து சென்றுவிடுவேன்" எனக் குறிப்பிட்டிருந்தார்.

    தார்மீகம் குறித்த கேள்விக்கு "கௌரவம், நேர்மை, உதவும் குணம், இரக்கம் இவைதான் தார்மீகமான விஷயங்களே தவிர ஒருவரது ஸ்டைல் அல்ல" என்று பதிலளித்திருப்பவர், "ஒரு நடிகை பிகினி அணிவது மிகவும் சாதாரண விஷயம். இதைவிட கவனம் செலுத்த வேண்டிய கல்வி போன்ற விஷயங்கள் இங்கு ஏராளம் இருக்கிறது. நான் எனக்கு விருப்பமானதை உடுத்துகிறேன். மற்றவர்களின் கமெண்டை பற்றி நான் கவலைப்படவில்லை" என கூறியுள்ளார்.

    வேலையில்லா பட்டதாரி 2 படத்தில் சின்ன வேடத்தில் நடித்த ரைசா வில்சனை பிக் பாஸ் நிகழ்ச்சி பிரபலப்படுத்தியது. அவர் நடிப்பில் வெளிவந்த படங்களில் பியார் பிரேமா காதல் படம் மட்டும் ஓரளவு ஓடியது. தற்போது ஒருசில படங்களில் நடித்து வருகிறார். சமீபத்தில், பேஷியல் செய்து முகம் வீங்கிப் போய் சம்பந்தப்பட்ட நிறுவனம் மீது ஒரு கோடி கேட்டு ரைசா வில்சன் புகார் செய்திருந்தார். இப்போது உள்ளாடை அணியாமல் சட்டை பட்டன்களை திறந்தபடி போஸ் கொடுத்து மீடியாவின் கவனத்தை கவர்ந்திருக்கிறார்.
    திரையில் ரைசா பேசப்பட்டதைவிட திரைக்கு வெளியேதான் அதிகம் பேசப்படுகிறார்.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Shalini C
    First published: