இத்தனை ஆண்டுகளாக ஹீரோவாக நடிக்கும் ஒரே நடிகர் இந்தியாவிலேயே ரஜினி ஒருவர்தான் இருப்பார் என நடிகை ராதிகா கூறியுள்ளார்.
நடிகை ராதிகா அளித்த பேட்டி ஒன்றில் கூறியதாவது:-
நண்பர் என்ற வகையில், நான் அதிக விஷயங்களை ஷேர் செய்தது ரஜினிசாருடன் தான். எங்களுக்குள் ஆழமான நட்பு உண்டு. ஒருவர் இத்தனை ஆண்டுகளாக ‘சூப்பர் ஸ்டாராக’ இருப்பது என்பது சாதாரண விஷயம் அல்ல. அதனை நாம் பாராட்ட வேண்டும். அவர் எண்ணற்ற சவால்களை எதிர்கொண்டுதான் சூப்பர் ஸ்டார் என்ற இடத்திற்கு வந்திருக்கிறார்.
அவருக்கு வித்தியாசமான படங்களை பண்ண வேண்டும் என்ற ஆசை உண்டு. ஆனால் ‘சூப்பர் ஸ்டார்’ என்ற அந்தஸ்து காரணமாக, அவர் குறிப்பிட்ட படங்களை மட்டும் தான் பண்ணிக் கொண்டிருக்கிறார். இத்தனை ஆண்டுகள் ஹீரோவாக நடிக்க கூடிய ஒரே நடிகர், இந்தியாவிலேயே ரஜினியாகத்தான் இருப்பார். தமிழ், இந்தி, தெலுங்கு என மொத்தம் 7 படங்களில் ரஜினியுடன் நடித்துள்ளேன்.
தாய்லாந்தில் சீறும் அஜித்தின் பைக்.. மீண்டும் ட்ரிப்பை தொடங்கிய துணிவு ஹீரோ!
நான் நடித்த சீரியல்களிலேயே ‘சித்தி’ தான் எனக்கு விருப்பமான சீரியல். தனிப்பட்ட வாழ்க்கையில் அம்மாவாக இருப்பது மிகவும் பிடித்திருக்கிறது. சூர்யா, விஜய்க்கு அம்மாவாக நடித்துள்ளேன். இருவரும் சிறந்த நடிகர்கள்.
இருவரில் யாருக்கு நான் அம்மாவாக இருப்பது பொருத்தம் என்று கேட்கக்கூடாது. எனக்கு பிள்ளையாக நடிக்க இருவரில் யார் சரியாக இருப்பார் என்று கேட்பதுதான் கரெக்டாக இருக்கும்.
நடிகைகளுக்கு விடாமுயற்சி இருக்க வேண்டும். அது மிக மிக அவசியம். என் கணவரை போன்று எனக்கு யாரும் சப்போர்ட் செய்ததில்லை. விடாமுயற்சியை எல்லாம் அவரிடம்தான் கற்றுக்கொள்ள வேண்டும். என்னுடைய முதல் படம் எனக்கு எதிர்பாராத விதமாக அமைந்துவிட்டது. அதன்பின்னர் விடாமுயற்சியுடன் நடிக்க கற்றுக் கொண்டேன்.
''மூக்கு ஆபரேஷன்.. உடல் மாற்றத்துக்கு உரிமை உண்டு'' - பளீரென பேசிய ஸ்ருதிஹாசன்!
சினிமா துறையில் நான் நல்ல நிலைமைக்கு வருவதற்கு ஏராளமானோர் உதவி செய்துள்ளனர். அவர்களுக்கு நன்றி சொல்ல கடமைப்பட்டுள்ளேன். ஒரு காலத்தில் பாரதிராஜா என்னை மிரட்டி கொண்டிருந்தார். இப்போது நான் அவரை மிரட்டி கொண்டிருக்கிறேன்.
முதல் படத்தில் என்னிடம் கறாராக நடந்து கொள்வார். அவர் கொஞ்சம் ஓவராக போனால், சார் நான் லண்டன் போகிறேன் என்று சொல்லிவிடுவேன். அதற்கு பின்னர் அமைதியாகி விடுவார். பாலுமகேந்திரா சார் மிகச் சிறந்த டைரக்டர். அவர்களைப் போன்றவர்கள் இப்போது இருக்கிறார்களா என்று நினைத்து பார்க்க முடியாது. அவருடைய திறமையை யாருடனும் ஒப்பிட முடியாது.
இவ்வாறு ராதிகா கூறினார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Radhika, Rajinikanth