• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • நடிகைகளை படுக்கைக்கு அழைப்பதாக குற்றச்சாட்டு...! வரலட்சுமியின் கருத்தை ஆமோதித்த ராதிகா சரத்குமார்

நடிகைகளை படுக்கைக்கு அழைப்பதாக குற்றச்சாட்டு...! வரலட்சுமியின் கருத்தை ஆமோதித்த ராதிகா சரத்குமார்

ராதிகா மற்றும் வரலட்சுமி

ராதிகா மற்றும் வரலட்சுமி

  • News18
  • Last Updated :
  • Share this:
    தமிழ் சினிமாவில் நடிகைகளை படுக்கைக்கு அழைப்பது தனக்கும் நடந்ததாக நடிகை வரலட்சுமி கூறிய நிலையில், அதனை அவரது தாயார் ராதிகா சரத்குமார் ஆமோதித்துள்ளார். 

    தமிழ் சினிமாவில் வாரிசு நடிகர்களில் பலர் இருந்தாலும் கூட அவர்களில் மிகவும் தைரியம் மிகுந்தவர்களாக என்ன நடந்தாலும் அது தன் குடும்ப நபர்களாக இருந்தாலும் கூட வெளிப்படையாக பேசக் கூடிய நடிகைகளில் மிக முக்கியமானவர் வரலட்சுமி.

    தொடர்ந்து அவர் பெண்கள் மீதான பல அவலங்களுக்கு குரல் கொடுத்து வருகிறார். சக்தி என்ற பெண்களுக்கு பாதுகாப்பான அமைப்பையும் நடத்தி வருகிறார். #MeeToo-க்கு ஆதரவாக குரல் கொடுக்கும் இவர், நியூஸ் 18-க்கு அளித்த பேட்டியில் தனக்கு நடந்த பாலியல் சீண்டல்களுக்கு எதிரான அனைத்து ஆதாரங்களையும் தன்னிடம் வைத்திருப்பதாக தெரிவித்துள்ளார்.



    குறிப்பாக தமிழ் சினிமாவில் தான் என்னதான் வாரிசு நடிகையாக இருந்தாலும் கூட தனக்கும் அந்த அவலம் ஏற்பட்டு இருப்பது வேதனை அளிப்பதாக கூறினார். படங்களில் தான் நடிக்க வேண்டும் என்றால். தயாரிப்பாளர்களுடன் மற்றும் இயக்குநர்களிடமும் அட்ஜெஸ்ட் செய்து கொள்ளுமாறும், தான் அப்படி செய்ய மாட்டேன் அதற்காக சினிமா வாய்ப்புகள் போனாலும் பரவாயில்லை என்று தெரிவித்திருக்கிறார்.

    இது குறித்து பலர் பேசிய ஆடியோ பதிவு தன்னிடம் இருப்பதாக தெரிவித்துள்ள வரலட்சுமி,  எல்லாம் நடந்த முடிந்த பிறகு பெண்கள் புகார் தெரிவிப்பது என்பது ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் தற்காப்புக்காக பெண்கள் தங்களையே தயார் படுத்திக்கொள்ள வேண்டும் என்றும் தெரிவித்தார்.

    இந்த நிலையில், வரலட்சுமியின் பேட்டியை ரீ-ட்வீட் செய்துள்ள அவரின் தாயார் ராதிகா சரத்குமார், ”சரியாக சொல்லியிருக்கிறாய் வரு... உனக்கு பலமாக இருக்கிறேன்” என்று கூறியுள்ளார்.



    Also See...

     

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Sankar
    First published: