'மங்காத்தா' பட நடிகைக்கு கொரோனா பாசிட்டிவ்..

தனக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பதாக மங்காத்தா பட நடிகை ரேச்சல் வைட் சமூகவலைதள பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

'மங்காத்தா' பட நடிகைக்கு கொரோனா பாசிட்டிவ்..
நடிகை ரேச்சல்
  • Share this:
இந்தியாவில் நாளுக்கு நாள் கொரோனா வைரஸ் தொற்று பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை உயர்ந்து வருகிறது. இதுவரை ஒன்பது லட்சத்துக்கும் அதிகமானோர் வைரஸ் தொற்று பாதிக்கப்பட்டு, ஐந்து லட்சத்துக்கும் அதிகமானோர் குணமடைந்துள்ளனர். இருபத்து மூன்றாயிரத்துக்கும் அதிகமானோர் நோய்த்தொற்றால் உயிரிழந்துள்ளனர்.

சமீபத்தில் பாலிவுட் முன்னணி நடிகரான அமிதாப்பச்சன், அபிஷேக் பச்சன், ஐஸ்வர்யாராய் அவரது மகள் ஆராத்யா உள்ளிட்டோருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். அதேபோல் மற்றொரு பாலிவுட் பிரபலமான அனுபம் கேர் குடும்பத்தில் நால்வருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதுபாலிவுட் திரையுலகில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் தமிழில் மங்காத்தா படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடித்த ரேச்சல் வைட், தனக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பதாகவும், தனக்காக பிரார்த்தனை செய்யுங்கள் என்றும் ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இதையடுத்து பலரும் அவர் விரைவில் மீண்டு வர வேண்டும் என்று கருத்து பதிவிட்டனர். அவர்களுக்கு நன்றி தெரிவித்தும் ட்வீட் செய்துள்ளார் ரேச்சல்.


தமிழில் மங்காத்தா படத்தில் மட்டுமே நடித்திருக்கும் ரேச்சல் அதிகமாக இந்தி மற்றும் பெங்காலி மொழி படங்களில் நடித்திருப்பதும் குறிப்பிடத்தக்கது.
First published: July 14, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading