• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • Enjoy Enjaami: ’எஞ்சாய் எஞ்சாமி’ பாடலுக்கு நடிகை ராஷி கண்ணா அசத்தல் நடனம்!

Enjoy Enjaami: ’எஞ்சாய் எஞ்சாமி’ பாடலுக்கு நடிகை ராஷி கண்ணா அசத்தல் நடனம்!

ராஷி கண்ணா

ராஷி கண்ணா

’என்ஜாய் எஞ்சாமி’ பாடலுக்கு நடிகை ராஷி கண்ணா நடனமாடிய வீடியோவை தனது இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார்.

  • Share this:
    ’என்ஜாய் எஞ்சாமி’ பாடலுக்கு நடிகை ராஷி கண்ணா நடனமாடிய வீடியோவை தனது இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார்.

    சுயதீன கலைஞர்களை ஊக்குவிக்க இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் உருவாக்கியுள்ள ‘மாஜா’ தளத்தின் தயாரிப்பில் உருவாகியுள்ள பாடல் ‘என்ஜாய் எஞ்சாமி’. இந்தப் பாடலுக்கு இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். பாடகர்கள் தீ மற்றும் அறிவு இதனை பாடியுள்ளனர்.

    இந்தப் பாடலை சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைத்துத் தரப்பினரும் வெகுவாக கொண்டாடி வர்கிறார்கள். குறிப்பாக என்ஜாய் எஞ்சாமி பாடலை ஆடி - பாடி குழந்தைகளின் வீடியோவும் சமூக வலைதளங்களில் வலம் வந்த வண்ணம் இருக்கின்றன. அதோடு அமுல் நிறுவனம், தீ மற்றும் அறிவு இருவரையும் கார்ட்டூனாக சித்தரித்து சிறப்பித்தது. இதையடுத்து ’என்ஜாய் எஞ்சாமி’ பாடல் யூ-ட்யூபில் 97 மில்லியன் (9.7 கோடி) பார்வையாளர்களைக் கடந்துள்ளது!



     




    View this post on Instagram





     

    A post shared by Raashii Khanna (@raashiikhanna)






    இந்நிலையில் பிரபலங்கள் பலரும் இந்தப் பாடலுக்கு நடனமாடி அந்த வீடியோவை தங்களது சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகிறார்கள். அந்த வீடியோக்களும் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றன. சின்னத்திரை நடிகைகள் ஸ்ருதி ராஜ், ஆல்யா மானசா, வைஷாலி தனிகா, தேவிப்ரியா, நடிகைகள் நஸ்ரியா, ஜனனி ஐயர் உள்ளிட்ட பலர், ‘என்ஜாய் எஞ்சாமி’ பாடலுக்கு நடனமாடி அந்த வீடியோக்களை தங்களது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டிருந்தனர்.

    இந்நிலையில் நடிகை ராஷி கண்ணாவும் இந்த ட்ரெண்டிங் பாடலுக்கு நடனமாடியிருக்கிறார். ”என்ஜாய் எஞ்சாமி பாடல் மீது வைத்திருந்த அன்பால் நான் இந்த சேலஞ்சை செய்ய வேண்டியிருந்தது” எனக் குறிப்பிட்டு அந்த வீடியோவை வெளியிட்டிருக்கிறார் ராஷி கண்ணா. அதில் பாடலைப் பாடிய தீ மற்றும் அறிவு இருவரையும் டேக் செய்திருக்கிறார்.

    விஜய் சேதுபதியின் ‘சங்கத்தமிழன்’ படத்தில் கடைசியாக நடித்திருந்த ராஷி கண்ணா, தற்போது சுந்தர் சி-யின் அரண்மனை 3, விஜய் சேதுபதியின் துகளக் தர்பார், ஜீவா மற்றும் அர்ஜூன் நடிக்கும் மேதாவி ஆகியப் படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார்.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Shalini C
    First published: