புது மனுஷியாக உணர்கிறேன்! பிகினி படத்துடன் மெசேஜ் சொன்ன ராய் லட்சுமி

நடிகை ராய் லட்சுமி நண்பர்களுடன் வெளியில் சென்று புகைப்படம் எடுத்து தனது சமூகவலைதள பக்கத்தில் வெளியிடுவதை வழக்கமாக கொண்டுள்ளார்.

news18
Updated: July 17, 2019, 6:07 PM IST
புது மனுஷியாக உணர்கிறேன்! பிகினி படத்துடன் மெசேஜ் சொன்ன ராய் லட்சுமி
ராய் லட்சுமி
news18
Updated: July 17, 2019, 6:07 PM IST
நடிகை ராய் லட்சுமி பிகினி படத்துடன் இருக்கும் புகைப்படத்தை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

ராய் லட்சுமி தமிழ் சினிமாவில் கற்க கசடற படத்தின் மூலம் அறிமுகமானவர். இதை தொடர்ந்து தாம் தூம். மங்காத்தா, வாமனன், முத்திரை, காஞ்சனா ஆகிய படங்களில் நடித்துள்ளார்.

படங்களில் நடித்து வந்தாலும் அவ்வப்போது நண்பர்களுடன் வெளியில் சென்று புகைப்படம் எடுத்து தனது சமூகவலைதள பக்கத்தில் வெளியிடுவதை வழக்கமாக கொண்டுள்ளார். தற்போது அவர் பிகினி உடையுடன் எடுத்த புகைப்படம் ஒன்றை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.


பிகினி படத்தை வெளியிட்ட ராய் லட்சுமி, ‘இந்த உடலமைப்புக்காக மிகவும் கஷ்டப்பட்டேன். என் வாழ்நாள் முழுவதும் எடை கூடுவது, குறைப்பது என மிகவும் சிரமப்பட்டுள்ளேன். இப்போது புது ஆளாக உணர்கிறேன். இந்த புது உடலமைப்பை விரும்புகிறேன். கட்டுக்கோப்பாக இருப்பது உடலளவில் மாற்றத்தை ஏற்படுத்தாது மனதளவிலும் மாற்றத்தை ஏற்படுத்தும். இதை செய்ய ஆரம்பித்ததில் மகிழ்ச்சி’ என்று பதிவிட்டுள்ளார்Also watch

First published: July 17, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...