ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

வெங்கட் பிரபு-நாக சைத்தன்யா படத்தில் இணையும் முக்கிய நடிகை

வெங்கட் பிரபு-நாக சைத்தன்யா படத்தில் இணையும் முக்கிய நடிகை

நாக சைத்தன்யா - வெங்கட் பிரபு

நாக சைத்தன்யா - வெங்கட் பிரபு

'NC22' படத்தில் வில்லனாக ஜீவா நடிப்பதாக கூறப்படுகிறது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

வெங்கட் பிரபு - நாக சைத்தன்யா படத்தில் நடிகை பிரியாமணி முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்கவிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 

இயக்குநர் வெங்கட் பிரபு, நாக சைதன்யாவை வைத்து தனது அடுத்த படத்தின் படப்பிடிப்பை கடந்த மாதம் தொடங்கினார் என்பது நாம் அனைவரும் அறிந்ததே. போலீஸ் த்ரில்லர் என்று கூறப்படும் இந்தப் படம் 'NC22' மற்றும் 'VP11' என்றழைக்கப்படுகிறது. ஸ்ரீனிவாசா சில்வர் ஸ்க்ரீன்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படம் தமிழ், தெலுங்கு மொழிகளில் தயாராகிறது.

சிம்பு மற்றும் எஸ்.ஜே.சூர்யா நடிப்பில் வெங்கட் பிரபுவின் கடைசியாக வெளியான 'மாநாடு' திரைப்படம் மாபெரும் வெற்றியடைந்ததால் அவரின் அடுத்தப் படத்திற்கு எதிர்பார்ப்பு அதிகரித்திருக்கிறது. இப்படத்தில் கிருத்தி ஷெட்டி கதாநாயகியாக நடிக்கிறார். 'NC22' படத்தில் வில்லனாக ஜீவா நடிப்பதாக கூறப்படுகிறது.

செவ்வந்தி சீரியல் நடிகை திவ்யா ஸ்ரீதருடனான பிரச்னை... சீரியல் நடிகர் அர்னாவிற்கு சம்மன்

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இந்நிலையில் நடிகை பிரியாமணியும் 'NC22' படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளதாக நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இளையராஜா மற்றும் யுவன் ஷங்கர் ராஜா இருவரும் இணைந்து மாமனிதன் படத்திற்குப் பிறகு 'என்சி22' படத்திற்கு இசையமைக்கவுள்ளனர். ஏப்ரல் 2023-ல் இப்படம் வெளியாகும் எனக் கூறப்படுகிறது.

First published: