ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

''கனவு நினைவாகும் நாள்'' - புதிய ஹோட்டல் திறக்கும் பிரியா பவானி ஷங்கர் - வைரலாகும் வீடியோ

''கனவு நினைவாகும் நாள்'' - புதிய ஹோட்டல் திறக்கும் பிரியா பவானி ஷங்கர் - வைரலாகும் வீடியோ

பிரியா பவானி ஷங்கர்

பிரியா பவானி ஷங்கர்

இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது புதிய உணவகம் குறித்து வீடியோ மூலம் தகவல் ஒன்றை பிரியா பவானி ஷங்கர் பகிர்ந்துள்ளார்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

செய்திவாசிப்பாளராக ரசிகர்களுக்கு அறிமுகமாகி சின்னத்திரை தொடரில் நடித்ததன் மூலம் மிக பிரபலமானவர் நடிகை பிரியா பவானி ஷங்கர். ரத்ன குமார் இயக்கத்தில் வைபவ் நடித்த மேயாத மான் படம் மூலம் நடிகையாக திரையுலகில் அடியெடுத்து வைத்தார். அந்தப் படத்தின் வெற்றி அவரை தமிழின் பரபரப்பான கதாநாயகியாக உயர்த்தியது.

பிரியா பவானி ஷங்கர் நடிப்பில் கடந்த வருடம் ஹாஸ்டல், குருதி ஆட்டம், திருச்சிற்றம்பலம், யானை ஆகிய 4 படங்கள் வெளியாகியிருந்தன. இதில் திருச்சிற்றம்பலம் படம் நல்ல வெற்றியைப் பதிவு செய்தது.

சிம்புவின் பத்து தல, ஜெயம் ரவியுடன் அகிலன், ராகவா லாரன்ஸுடன் ருத்ரன், எஸ்.ஜே.சூர்யாவுடன் பொம்மை ஆகிய படங்கள் பிரியா பவானி ஷங்கர் நடிப்பில் இந்த ஆண்டு வெளியாகவிருக்கிறது.

குறிப்பாக ஷங்கர் இயக்கிவரும் இந்தியன் 2 படத்தில் கமல்ஹாசனுடன் இணைந்து பிரியா பவானி ஷங்கர் நடித்துள்ளார். இந்தியன் 2 இந்த ஆண்டு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் டிமாண்டி காலனி 2, தெலுங்கில் சத்ய தேவுடன் ஒரு படம் என இரண்டு படங்களில் தற்போது நடித்துவருகிறார்.


இந்த நிலையில் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது புதிய உணவகம் குறித்து வீடியோ மூலம் தகவல் ஒன்றை பிரியா பவானி ஷங்கர் பகிர்ந்துள்ளார். அதில், 'எங்கள் சொந்த உணவகம். இது எங்கள் கனவாக இருந்தது. அந்த நாள் அருகில் வந்துவிட்டது. எங்கள் கனவுக்கு உயிர் கொடுத்திருக்கிறோம். உங்களுக்கு பரிமாற காத்திருக்கிறோம். லயம்ஸ் டைனர் (LIAM's Diner)'' என்று குறிப்பிட்டுள்ளார்.

First published:

Tags: Priya Bhavani Shankar