விக்ரமுக்கு ஜோடியாகும் பிரியா பவானி சங்கர்!

க்ரைம் த்ரில்லர் பாணியில் அதிக பொருட்செலவில் உருவாகும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு செப்டம்பர் மாதத்திலிருந்து தொடங்க இருக்கிறது.

news18
Updated: July 22, 2019, 1:07 PM IST
விக்ரமுக்கு ஜோடியாகும் பிரியா பவானி சங்கர்!
விக்ரம் | பிரியா பவானி சங்கர்
news18
Updated: July 22, 2019, 1:07 PM IST
விக்ரம் நடிக்கவுள்ள புதிய படத்தில் அவருக்கு ஜோடியாக பிரியா பவானி சங்கர் நடிக்க உள்ளார்.

விக்ரம் நடிப்பில் சமீபத்தில் வெளியான படம் கடாரம் கொண்டான். தூங்காவனம் பட இயக்குநர் எம்.ராஜேஷ் ராஜேஷ் செல்வா இயக்கத்தில் உருவான இந்தப் படத்தில் அக்‌ஷராஹாசன், அபிஹாசன் உள்ளிட்டோர் நடித்திருந்தனர். இந்தப் படம் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.

இந்தப் படத்தை அடுத்து இமைக்கா நொடிகள் பட இயக்குநர் அஜய் ஞானமுத்து இயக்கத்தில் புதிய படத்தில் நடிக்கிறார் விக்ரம். வயாகாம் மற்றும் செவன் ஸ்கிரீன் நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கவுள்ள இந்தப் படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார்.


க்ரைம் த்ரில்லர் பாணியில் அதிக பொருட்செலவில் உருவாகும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு செப்டம்பர் மாதத்திலிருந்து தொடங்க இருக்கிறது.இந்நிலையில் இந்தப் படத்தில் நாயகியாக நடிக்க இளம் நடிகை பிரியா பவானி சங்கர் ஒப்பந்தமாகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. விக்ரமுடன் நடிக்கும் மற்ற நடிகர்களின் தேர்வு நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது.

Loading...

இந்தப் படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்ட போது 2020-ம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் படம் திரைக்கு வரும் என்று கூறப்பட்டது. ஆனால் விஜய், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகும் படம், அஜித்தின் புதிய படம் ஆகியவை வெளியாகவுள்ளதால், பட வெளியீட்டை ஆகஸ்ட் 2020-க்கு மாற்ற படக்குழு திட்டமிட்டுள்ளது.

வீடியோ பார்க்க: கனவு நாயகன் விஜய் தேவரகொண்டா நேர்காணல்

First published: July 22, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...