விஷாலுக்கு ஜோடியாகும் பிரியா பவானிசங்கர்

விஷால் நாயகனாக நடிக்க இருக்கும் புதிய படத்தில் அவருக்கு ஜோடியாக பிரியா பவானி சங்கர் ஒப்பந்தம் செய்யப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

விஷாலுக்கு ஜோடியாகும் பிரியா பவானிசங்கர்
விஷால் | பிரியா பவானிசங்கர்
  • Share this:
பிரியா பவானி சங்கர் நடிப்பில் கடைசியாக வெளியான படம் மாஃபியா சாப்டர் 1. இந்தப் படம் எதிர்பார்த்த வெற்றியைப் பெறவில்லை. இந்தப் படத்தை அடுத்து இந்தியன் 2, குருதி ஆட்டம், பொம்மை ஆகிய படங்களில் நடித்து வருகிறார் பிரியா பவானி சங்கர்.

இந்தப் படங்கள் மட்டுமல்லாது ராகவா லாரன்ஸ் நடிப்பில் 'ஃபைவ் ஸ்டார்' கதிரேசன் தயாரிக்கும் புதிய படத்திலும் நாயகியாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். மலையாளத்தில் ஹிட் அடித்த ஐயப்பனும் கோஷியும் படத்தின் தமிழ் ரீமேக் உரிமையை தயாரிப்பாளர் ஃபைவ் ஸ்டார் கதிரேசன் வாங்கியிருப்பதால் அந்தப் படத்தில் தான் ராகவா லாரன்ஸ் - பிரியா பவானி சங்கர் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், தற்போது கிடைத்திருக்கும் தகவலின்படி ஃபைவ் ஸ்டார் கதிரேசன் தயாரிப்பில் அடங்கமறு பட இயக்குநர் கார்த்திக் தங்கவேலு இயக்கத்தில் விஷால் நடிக்கும் படத்தில் பிரியா பவானி சங்கர் ஒப்பந்தமாகியிருப்பதாக கூறப்படுகிறது. லாக்டவுன் முடிந்த பின்னர் படப்பிடிப்பை தொடங்கவும் படக்குழு முடிவு செய்திருப்பதாகவும் தெரிய வருகிறது.


மேலும் படிக்க: ‘மாஸ்டர்' பட கேமராமேனுக்கு கிடைத்த புதிய அங்கீகாரம்
First published: May 27, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading