'சந்தோஷமா போய்ட்டு வாங்க தாத்தா’ பிரியா பவானி சங்கர் உணர்வு குறிப்பு!

நடிகை ப்ரியா பவானி சங்கர்

டிவி, சினிமாலாம் பாக்கவே கூடாதுன்னு சொன்ன தாத்தாவோட மெடிக்கல் காலேஜ் போகாத ஒரே பேத்தி நான் தான்.

 • Share this:
  நடிகை பிரியா பவானி ஷங்கரின் தாத்தா மரணமடைந்துள்ளார். இது குறித்து உணர்வுப்பூர்வமான பதிவொன்றை தனது சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளார் பிரியா.

  அந்த பதிவில், “தாத்தா சக்சஸ்ஃபுல் பிஸினெஸ்மேன். தனி மனுஷனா ஒண்ணுமே இல்லாம, வாழ்க்கையை ஆரம்பிச்சு 5 பசங்கள அமோகமா படிக்க வச்சு, 10 பேர பசங்கள்ல 8 பேரை டாக்டராக்கி அவங்களையும் டாக்டர்களுக்கு கட்டிக்கொடுத்து தான் உருவாக்கின ஒரு சிறிய மருத்துவர்கள் சூழ் உலகத்துல பெருமையா வாழ்ந்தவர்.

  நான் தாத்தாவோட ஃபேவரட் எல்லாம் இல்ல. ’என்னம்மா இவ்வளவு துஷ்டத்தனம் பண்ணுது இது’ அப்படிங்கற கேட்டகிரி தான் நாம. பள்ளி விடுமுறையில் தாத்தா வீட்ல விட்டுடுவாங்க. கட்டில்கள், ஊஞ்சல்கள், கைகள், கால்கள், எங்க மண்டைகள்ன்னு உடையாத ஐட்டம் எதுவும் இல்லை. கத்திக்குத்து முயற்சி, ஆள்கடத்தல், கொலை முயற்சி என சிறார் குற்றங்களும் இதில் அடங்கும். டிவி, சினிமாலாம் பாக்கவே கூடாதுன்னு சொன்ன தாத்தாவோட மெடிக்கல் காலேஜ் போகாத ஒரே பேத்தி நான் தான்.  போன வாரம் கடைசியாக அவர் கிட்ட பேசிட்டு இருந்தப்போ, உன்னை உங்க அப்பா தைரியமான பொண்ணா வளத்துருக்காரு. என் பொண்ணை நீ பத்திரமாக பார்த்துப்பேன்னு தெரியும்னு சொன்னாரு. அதோட அவர் முதல் சம்பளத்தில் அவங்க அம்மாவுக்கு வாங்கின தோடையும் எனக்கு கொடுத்தார். உங்க அம்மாவோட தோடையும், உங்க பொண்ணையும், மாப்பிள்ளையையும் என் உயிரை விட பத்திரமா பார்த்துப்பேன் தாத்தா, சந்தோசமா போயிட்டு வாங்க" எனத் தெரிவித்திருக்கிறார்.  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
  Published by:Shalini C
  First published: