Priya Anand: காரில் வெறித்தனமாக முத்தம் - வைரலாகும் பிரியா ஆனந்த் வீடியோ!

Priya Anand: காரில் வெறித்தனமாக முத்தம் - வைரலாகும் பிரியா ஆனந்த் வீடியோ!

பிரியா ஆனந்த்

காரில் போகும் போது வெறித்தனமாக முத்தம் கொடுத்த நடிகை பிரியா ஆனந்தின் வீடியோ வைரலாகி வருகிறது.

  • Share this:
காரில் போகும் போது வெறித்தனமாக முத்தம் கொடுத்த நடிகை பிரியா ஆனந்தின் வீடியோ வைரலாகி வருகிறது.

கடந்த 2009-ஆம் ஆண்டு நடிகர் ஜெய் ஜோடியாக 'வாமனன்' படத்தில் அறிமுகமானார். அதையடுத்து '180', 'எதிர் நீச்சல்', 'வணக்கம் சென்னை', 'அரிமா நம்பி', 'கூட்டதில் ஒருத்தன்' மற்றும் 'எல்.கே.ஜி' என பெரும்பாலும் வெற்றி பெற்ற திரைப்படங்களில் நடித்தார். படங்களில் அவர் நடித்த கதாபாத்திரங்கள் பாராட்டுகளைப் பெற்றன.

இந்நிலையில் பிரியா ஆனந்த், தனது சமூக ஊடக பக்கங்களில் ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார், அதில் ஒரு குழந்தைக்கு விடாமல் வெறித்தனமாக முத்தமிட்டு கொஞ்சுகிறார். அதை அந்த குழந்தையும், சந்தோஷமாக அனுபவிக்கிறது. அந்த வீடியோவை வெளியிட்டு, "மை ஹேப்பி சைல்ட், ஐ லவ் யூ & யுவர் மம்மி சோ மச்!” எனக் குறிப்பிட்டுள்ளார். இந்த வீடியோவை வெளியிட்டு 2 வாரம் ஆன நிலையில், தற்போது இன்ஸ்டாகிராமில் கவனம் ஈர்த்து வருகிறது.



 




View this post on Instagram





 

A post shared by Priya Anand (@priyawajanand)






பிரியா ஆனந்த் அடுத்து தமிழில்'சுமோ' என்ற படத்தில் நடிக்கிறார். அதில் அவர் தனது 'வணக்கம் சென்னை' ஹீரோ மிர்ச்சி சிவாவுடன் மீண்டும் இணைகிறார். அதோடு நடிகர் பிரசாந்த் ரீ எண்ட்ரியாகும், திரைப்படமான 'அந்தகன்' படத்திலும் நடிக்கிறார். இந்தியில் வெளியாகி பெரும் வெற்றியைப் பெற்ற அந்தாதுன் திரைப்படத்தின் தமிழ் ரீமேக்கான இந்தப் படத்தை தியாகராஜன் இயக்க, சிம்ரன் முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.



உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
Published by:Shalini C
First published: