நடிகை ப்ரனிதா திடீர் திருமணம் - வருத்தம் தெரிவித்து கடிதம்!

ப்ரனிதா ரகசிய திருமணம்

தனது திருமண செய்தியை உறுதிப்படுத்திய ப்ரனிதா, திருமணத்தை எப்போது நடத்துவது என்பதில் குழப்பம் இருந்ததாகவும், திடீரென திருமணம் செய்து கொண்டதால் முன்பே அறிவிக்க முடியாமல் போனதாகவும், நண்பர்களிடம் வருத்தம் தெரிவித்துள்ளார் ப்ரனிதா

  • News18
  • Last Updated :
  • Share this:
தமிழில் சகுனி, மாசு என்கிற மாசிலாமணி, எனக்கு வாய்த்த அடிமைகள் போன்ற திரைப்படங்களில் நடித்த ப்ரனிதா மே 30ம் தேதி திடீர் திருமணம் செய்து கொண்டார். தனது திருமண தேதியை முன்பே தெரிவிக்காததற்கு அவர் வருத்தமும் தெரிவித்துள்ளார்.

ப்ரனிதா கர்நாடகாவைச் சேர்ந்தவர். 2010 இல் கன்னடப் படத்தில் அறிமுகமானவர் தொடர்ந்து தெலுங்கில் அத்தரின்டிகே தாரேதி, பாவா உள்ளிட்ட பல படங்களில் நடித்தார். தமிழில் சகுனி, மாசு என்கிற மாசிலாமணி ஆகியவை அவர் நடித்தப் படங்களில் குறிப்பிடத்தகுந்தவை.

ப்ரனிதா- நித்தின் ராஜூ


தற்போது ஒரு கன்னட படத்திலும் இரு இந்திப் படங்களிலும் நடித்து வருகிறார். இந்நிலையில், நடிகை ப்ரனிதாவின் திருமண புகைப்படங்கள் சமூக ஊடகங்களில் வெளியாகின. இதையடுத்து, தனது திருமண செய்தியை உறுதிப்படுத்திய ப்ரனிதா, திருமணத்தை எப்போது நடத்துவது என்பதில் குழப்பம் இருந்ததாகவும், திடீரென திருமணம் செய்து கொண்டதால் முன்பே அறிவிக்க முடியாமல் போனதாகவும், நண்பர்களிடம் வருத்தம் தெரிவித்துள்ளார் ப்ரனிதா.

 

மேலும் படிக்க.. பெயரில் ஜாதியை தூக்கிய ஜனனி..

ப்ரனிதாவை திருமணம் செய்து கொண்டவர் பெங்களூருவைச் சேர்ந்த தொழிலதிபர் நித்தின் ராஜு. இருவரும் காதலித்து திருமணம் செய்துகொண்டுள்ளனர். நித்தின் ராஜுவை முன்பே தெரியும் என்றும், இருவருக்கும் பொதுவான நண்பர்கள் நிறைய இருப்பதாகவும், பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்ய வேண்டும் என்று இருவரும் சேர்ந்தே முடிவெடுத்திருந்ததாகவும் ப்ரனிதா கூறியுள்ளார்.



நேற்று பெங்களூருவில் நடந்த திருமணத்தில் இருவரது பெற்றோர்கள், நெருங்கிய உறவினர்கள், நண்பர்கள் என மிக குறைவான நபர்களே கலந்து கொண்டனர்.

உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்.
Published by:Murugesh M
First published: