• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • 2 டோஸ் தடுப்பூசி போட்ட நடிகைக்கு 2-வது முறை கொரோனா தொற்று

2 டோஸ் தடுப்பூசி போட்ட நடிகைக்கு 2-வது முறை கொரோனா தொற்று

பிரக்யா ஜெய்ஸ்வால்

பிரக்யா ஜெய்ஸ்வால்

இரண்டு டோஸ் தடுப்பூசி செலுத்திய பிறகும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருக்கிறார் பிரக்யா.

  • Share this:
    நடிகை பிரக்யா ஜெய்ஸ்வாலுக்கு இரண்டாவது முறையாக கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.

    தெலுங்கில் பல படங்களில் நடித்துள்ளவர் பிரக்யா ஜெய்ஸ்வால். தமிழில் ’விரட்டு’ என்ற படத்தில் நடித்திருக்கும் இவர், இந்தி மற்றும் கன்னட மொழி படங்களிலும் நடித்துள்ளார். தற்போது அகண்டா என்கிற படத்தில் நடித்து வருகிறார் பிரக்யா. இதில் பிரபல தெலுங்கு நடிகர் பாலகிருஷ்ணாவுக்கு ஜோடியாக அவர் நடித்துள்ளார்.

    கடந்த சில மாதங்களுக்கு முன் பிரக்யா ஜெய்ஸ்வாலுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது. சிகிச்சைக்குப் பின் அதில் இருந்து மீண்ட நிலையில் தற்போது மீண்டும் பிரக்யாவுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இரண்டு டோஸ் தடுப்பூசி செலுத்தியும், அவர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருப்பது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.



     




    View this post on Instagram





     

    A post shared by Pragya Jaiswal (@jaiswalpragya)






    இது குறித்து தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ள பிரக்யா, ”எனக்கு மீண்டும் கொரோனா தொற்று பாதித்துள்ளது. இரண்டு டோஸ் தடுப்பூசி செலுத்திய பிறகும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருக்கிறேன். தற்போது மருத்துவர்களின் அறிவுரைப்படி, தனிமைப்படுத்திக் கொண்டிருக்கிறேன். கடந்த 10 நாட்களில் என்னை சந்தித்த அனைவரும் கொரோனா பரிசோதனை செய்துகொள்ளுங்கள்” என்று குறிப்பிட்டுள்ளார்.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Shalini C
    First published: