ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

வாழ்நாள் முழுவதும் இப்படித்தான்... தீவிர நோயால் பாதிக்கப்பட்ட பூனம் கவுர்

வாழ்நாள் முழுவதும் இப்படித்தான்... தீவிர நோயால் பாதிக்கப்பட்ட பூனம் கவுர்

பூனம் கவுர்

பூனம் கவுர்

கைத்தறி நெசவாளர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை முன்னிலைப்படுத்தும் விதத்தில், ராகுல் காந்தியின் பாரத் ஜோடோ யாத்ராவில் பங்கேற்றிருந்தார்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

நடிகை பூனம் கவுர் ஃபைப்ரோமியால்ஜியா என்ற நோயால் பாதிக்கப்பட்டுள்ளார்.

இது "பரவலான தசைக்கூட்டு வலியுடன் கூடிய சோர்வு, தூக்கம், நினைவாற்றல் மற்றும் மனநிலை மாற்றம்" ஆகிய பிரச்னைகளை கொண்டிருக்கும். பல மொழிகளில் நடித்துள்ள பூனம், சமீபத்தில் கேரளாவில் இருந்தார். அப்போது அவருக்கு இந்த பிரச்னை இருப்பது நிபுணர்களால் கண்டறியப்பட்டது.

இதற்கு அறிகுறிகளைக் கண்டறிந்து வாழ்க்கை முறையை மாற்றி, உடற்பயிற்சி, தெரபிகள் மற்றும் சிகிச்சைகளை கட்டாயம் எடுத்துக் கொள்ள வேண்டுமாம். இந்த ஃபைப்ரோமியால்ஜியா ஒருவருக்கு வந்துவிட்டால், வாழ்நாள் முழுவதும் அதோடு அவர் வாழ பழகிக் கொள்ள வேண்டும் என மெடிக்கல் போர்ட்டல் ஒன்றில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பூனம் கவுருக்கு கடந்த 2 ஆண்டுகளாக கடுமையான உடல் வலி இருந்ததாக அவருக்கு நெருக்கமான ஒருவர் தெலுங்கு ஊடகத்திடம் தெரிவித்துள்ளார். தெலுங்கு மாநிலங்களில் சமூக செயல்பாட்டாளராக வலம் வரும் பூனம், கைத்தறி நெசவாளர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை முன்னிலைப்படுத்தும் விதத்தில், ராகுல் காந்தியின் பாரத் ஜோடோ யாத்ராவில் பங்கேற்றிருந்தார்.

அருள்நிதியின் டிமாண்டி காலனி 2 படப்பிடிப்பு துவக்கம்!

36 வயதாகும் பூனம், தமிழில் நெஞ்சிருக்கும் வரை, உன்னைப்போல் ஒருவன், வெடி உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

First published:

Tags: Tamil Cinema